சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சினிமாவை தாண்டி ஓ.டி.டி-யும் கைவிட்ட 5 நடிகைகள்.. எல்லா பக்கமும் பேரடி வாங்கிய வாணி போஜன்

தமிழ் சினிமாவில் தங்களது நடிப்பில் வெளியான ஒரு சில ஹிட் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமான நடிகைகள் ஒரு காலகட்டத்திற்கு, பின் படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதிலும் சினிமாவையும் தாண்டி தற்பொழுது மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரியல் மூலம் வாய்ப்புகளை பெற்று வந்தனர். ஆனால் அதன் மூலமும் அங்கீகாரம் கிடைக்காமல் பேரடி வாங்கி வருகின்றனர். அப்படியாக சினிமாவையும் தாண்டி ஓடிடியும் கைவிட்ட 5 நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

அஞ்சலி: சினிமாவில் அங்காடி தெரு என்னும் ஹிட் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமான நடிகையாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து ஜெய், ஆர்யா போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீப காலமாகவே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த பட வாய்ப்புகளும் அமையாததால் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கினார். இதனைத் தொடர்ந்து ஃபால், ஜான்சி போன்ற தொடர்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்த நிலையில் அப்படி ஏதும் நடக்காமல் போனது.

Also Read: அஞ்சலியை தொடர்ந்து ராம் படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்.. யாரும் எதிர்பார்க்காத கூட்டணி

வாணி போஜன்: சின்னத்திரையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை வாணி போஜன். தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதிலும் அசோக்செல்வன் உடன் ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் செங்களம் என்ற வெப் சீரிஸ் வெளியானது. ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறாமல் பேரடி வாங்கியது என்றே சொல்லலாம். 

லட்சுமி மேனன்: தமிழில் சுந்தரபாண்டியன் என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர்தான் நடிகை லட்சுமிமேனன். தொடர்ந்து தான் நடிக்கும் படங்களின் மூலம் ஹிட் கொடுத்து வந்த இவர் தற்பொழுது சரிவர பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ட்ரஷர் ஹண்ட் ஜானரில் உருவான வெப் சீரிஸில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அதன் மூலம் பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது எந்த படங்களும் கைவசம் இல்லாமல் இருந்து வருகிறார்.

Also Read: ஒரு நடிகரை மட்டும் வச்சி என்ன பண்றது, நம்ம ரூட்டே வேற.. பக்கா ப்ளானுடன் இருக்கும் வாணி போஜன்

சாயா சிங்: சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை தான் சாயாசிங். அதிலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். தொடர்ந்து ஒரு சில ஹிட் படங்களை கொடுத்த இவர் அதன்பின் சரிவர பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். பின்னாளில் சின்னத்திரை சீரியல்களின் மூலம் அறிமுகமானாலும் அந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் கவனத்தை பெறவில்லை.

ரெஜினா கசாண்ட்ரா, : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் மற்றும் சக்ரா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமான நடிகையாக வலம் வந்தார். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து ஜான்பாஸ் ஹிந்துஸ்தான் கே மற்றும் ஃபார்ஸி ஆகியவை வெப் தொடர்களில் நடித்துள்ளார். இருந்தாலும் அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் ஆனது சரிவர இல்லாமல் தவித்து வருகிறார்.

Also Read: ஆண்களை அசிங்கப்படுத்திய ரெஜினா.. கைத்தட்டி சிரித்து சிக்கலில் மாட்டிய நிவேதா

Trending News