வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகை மெருகேற்றிய 5 நடிகைகள்.. 96 படத்தில் ஜானுவாக ஜொலித்ததற்கு இதுதான் காரணம்

5 actresses beauty with plastic surgery: சினிமாவிற்குள் நுழைவதற்கு திறமை இருந்தால் போதும். ஆனால் அடுத்தடுத்து வாய்ப்புகளை தக்க வைப்பதற்கு அழகு ரொம்ப அவசியம். அதனால் முக்கால்வாசி நடிகைகள் ஆரம்பத்தில் இருந்த அழகை இன்னும் அதிகப்படுத்தி தொடர்ந்து வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகை மெருகேற்றி இருக்கிறார்கள். அப்படியே எந்த நடிகைகள் என்ன சர்ஜரி பண்ணியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

நயன்தாரா: ஆரம்பத்தில் அறிமுகமான படங்களில் நயன்தாராவை பார்த்ததற்கும் இப்போ பார்ப்பதற்கும் ரொம்பவே வித்தியாசமாக முகப்பொலிவுடன் ஜொலித்து வருகிறார். அந்த வகையில் அவருடைய புருவத்தில் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கன்னம் பகுதியிலும், மூக்குப் பகுதியையும் சர்ஜரி செய்திருக்கிறார். அத்துடன் லிப் பில்லர்களையும் பயன்படுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிக ரிஸ்க் எடுத்த தமன்னா

சமந்தா: இவர் பானா காத்தாடி மூலம் அறிமுகமானபோது இருந்ததை விட தற்போது இவருடைய அழகு மொத்தமாக மாறி இருக்கிறது. அதற்கு காரணம் லிப் பில்லரை யூஸ் பண்ணி இருக்கிறார். உதட்டில் ஊசி போட்டு பலூன் போல வீங்க வைத்து ஹைலைட்டாக காட்ட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். இதே சினிமாவில் இருக்கும் முக்கால்வாசி ஹீரோயின்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஸ்ருதிஹாசன்: நடிகை ஸ்ருதிஹாசன் ஆரம்பத்தில் பார்த்ததைவிட இப்போ பார்ப்பதற்கு ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். அதற்கு என்ன செய்திருக்கிறார் என்றால் இவருடைய முகம் இயற்கையாகவே வட்டமாக இருக்கும். ஆனால் அந்த முக வடிவத்தை ஓவல் ஷேப்புக்கு மாற்றி இருக்கிறார். அதற்காக பிளாஸ்டிக் ச சர்ஜரிகளையும், காஸ்மெட்டிக் பொருள்களையும் வைத்து அழகை மெருகேற்றி இருக்கிறார்.

த்ரிஷா: இவருடைய மூக்கு ஷைனிங்காகவும் கொஞ்சம் தூக்கலாகவும் காட்ட வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். மேலும் இவருடைய முகத்தை அதிக பொலிவுடன் கொண்டுவர BOTOX என்னும் சர்ஜரி செய்திருக்கிறார். இதனால் தான் 96 படத்தில் பெருசாக மேக்கப் எதுவும் போடாமல் இருந்தாலும் ஜானுவாக மக்கள் மனதில் ஜொலித்திருக்கிறார்.

தமன்னா: இவர் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து செயற்கையாக அழகை மெருகேற்றி உள்ளார். எதற்காக இது என்றால் படத்திற்கு படம் ஷைனிங்காக காட்ட வேண்டும் என்பதற்காக முறையான சிக்கிச்சைகளை செய்து எந்தவித பின் பாதிப்பும் வராமல் இருப்பதற்காக அதிக ரிஸ்க் எடுத்து தமன்னா இயற்கை அழகே மாற்றி செயற்கையாக கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News