வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரஜினிக்கு ஜோடி போட்டு பின் அம்மாவாக நடித்த 5 நடிகைகள்.. அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி

ஹீரோயின்களை பொறுத்தவரை சினிமாவில் ஒரு சில காலகட்டத்திற்கு பிறகு கிடைக்கும் வாய்ப்பை ஏற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். அவ்வாறு பிரபலங்களின் ஜோடியாக நடித்து அதன் பின் அவர்களின் அம்மாவாகவும் படங்களில் இடம் பெற்று இருப்பார்கள்.

மேலும் இது போன்ற வாய்ப்புகள் கிடைத்தாலும் அதிலும் தன் திறமையை வெளிப்படுத்தும் ஹீரோயின்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு ரஜினிக்கு ஜோடியாக நடித்தும் பிறகு அம்மாவாகவும் இடம் பெற்ற 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: ஒரே கல்லில் ரெண்டு மாங்கா லாபத்தை பார்த்த மாரி செல்வராஜ்.. உதயநிதி மனசு வைத்தால் எது வேணாலும் நடக்கும்

லக்ஷ்மி: சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் தன் நடிப்பின் திறமையை வெளிக்காட்டியவர் லட்சுமி. நெற்றிக்கண், கோடை மழை போன்ற படங்களில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பெற்றவர். அதிலும் குறிப்பாக படையப்பா படத்தில் ரஜினியின் தாயாக சிறப்புற நடித்திருப்பார்.

சுஜாதா: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற படங்களில் முன்னணி கதாநாயகியாக இடம்பெற்றவர் சுஜாதா. தமிழில் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பொல்லாதவன் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதிலும் குறிப்பாக பாபா படத்தில் ரஜினியின் தாயாக இவர் இடம் பெற்ற கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார்.

Also Read: நண்பனை தூக்கி விட களம் இறங்கும் விஜய்சேதுபதி.. பொண்டாட்டியை வைத்து கல்லா கட்ட திட்டம் போடும் இயக்குனர்

வடிவுக்கரசி: தன்னுடைய துணிச்சலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் வடிவுக்கரசி. படிக்காதவன், மிஸ்டர் பரத், அருணாச்சலம் போன்ற படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பார். மேலும் சிவாஜி படத்தில் ரஜினியின் அம்மாவாகவும் இடம்பெற்று இருப்பார்.

ஸ்ரீவித்யா: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் பல பிரபலங்களோடு நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்தான் ஸ்ரீவித்யா. இவர் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பெற்றார். அதன்பின் தளபதி படத்தில் ரஜினியின் அம்மாவாக இடம் பெற்று பாசத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார்.

Also Read: மொக்க படத்தின் 2ம் பாகத்திற்கு சண்டை போடும் லிங்குசாமி.. ஆர்யா வேண்டாம் அந்த ஹீரோ தான் வேணுமாம்

சுமித்ரா: தமிழில் அவளும் பெண்தானே என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுமித்ரா. சிவாஜி கணேசன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த படம் புவனா ஒரு கேள்விக்குறி இப்படத்தில் இவரின் நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்து ஒன்றாகும். அதன்பின் பணக்காரன் படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும் சிறப்புற நடித்திருப்பார்.

Trending News