திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தத்ரூபமாக அம்மனாக காட்சியளித்த 5 நடிகைகள்.. சாமினா இப்படித்தான் இருப்பாங்க என நம்ப வைத்த நீலாம்பரி

Devotional Actress: நடிகைகள் பொருத்தவரை முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக சேர்ந்து நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்ததோடு, பல படங்களில் அம்மனாகவும் நடித்து மக்களுக்கு காட்சி அளித்திருக்கிறார்கள். அதில் இந்த நடிகைகளின் நடிப்பை யாராலயும் மிஞ்ச முடியாது என்று சொல்லும் அளவிற்கு தத்ரூபமாக அம்மன் கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

மீனா: இவர் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் ஜெயித்து மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறார். எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் அதை கனக்கச்சிதமாக நடிக்கக்கூடிய திறமையான நடிகை. இவர் எந்த அளவுக்கு ஹீரோயினாக மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறாரோ, அதே அளவுக்கு படைவீட்டு அம்மன் மற்றும் பாளையத்தம்மன் போன்ற படங்களில் அம்மனாகவும் நடித்து 90ஸ் கிட்ஸ்க்கு உண்மையில் சாமினா இப்படித்தான் இருப்பாங்க என்று நம்பும் படியாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.

Also read: வயது வித்தியாசம் பார்க்காமல் மீனா ஜோடி போட்ட 6 பிரபலங்கள்.. 28 வயசு கேப் எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்

ரம்யா கிருஷ்ணன்: இவருடைய மிகப்பெரிய சிறப்பு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை அசால்டாக நடித்து கொடுக்கக் கூடியவர். இவர் 80களில் பல படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து அசத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர்  ராஜகாளியம்மன், நாகேஸ்வரி, பொட்டு அம்மன், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி போன்ற படங்களில் அம்மனாக தத்ரூபமாக காட்சியளித்திருப்பார்.

கே ஆர் விஜயா: அந்த காலத்தில் சாமி படங்கள் என்றாலே அதற்கு முதல் சாய்ஸ் கே ஆர் விஜயா அவர்கள்தான். அதிலும் கடவுளின் பக்தையாகவும், அதே நேரத்தில் கடவுளின் மறு உருவமாக அம்மனாகவும் காட்சியளித்து பார்ப்பவர்களை வியக்க வைத்திருப்பார். இவருடைய நடிப்பிற்கு தற்போது வரை யாராலும் ஈடு கட்ட முடியாத அளவிற்கு மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

Also read: மாலத்தீவில் நடக்க போகும் ரம்யா கிருஷ்ணன் மகனின் நிச்சயதார்த்தம்.. கடைசியாக விலை போன 43 வயது முத்தின கத்திரிக்கா

ரோஜா: இவர் 80, 90களில் முன்னணி நடிகையாக வந்து முக்கால்வாசி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அத்துடன் பல படங்களில் அம்மன் ஆகவும் நடித்து இவருடைய நடிப்பை அசத்தலாக நடித்திருப்பார். அதிலும் இவர் அம்மனாக நடித்த கோட்டை மாரியம்மன் படத்தில் பத்ரகாளியாக நடிப்பை வெளிக்காட்டி இருப்பர்.

நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு ஹீரோயின் ஆக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்து இவர் வந்து நடித்தாலே அந்த படம் ஹிட் ஆகும் என்ற சொல்லும் அளவிற்கு பேரும் புகழையும் பெற்றுவிட்டார். அப்படிப்பட்ட இவர் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்து அதையும் கச்சிதமாக நடித்து மாடர்ன் காலத்து அம்மன் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி விட்டார்.

Also read:  கடைசியாக கெட்ட நேரத்தில் இருந்து வெளிவந்த நயன்தாரா.. சுத்தி அடிக்கும் கர்மாவுக்கு வைத்த முற்றுப்புள்ளி

Trending News