வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வில்லியாக ரஜினியை உரசிப் பார்த்த 5 நடிகைகள்.. சண்டி ராணியாக சீறிய விஜயசாந்தி

ஹீரோயின்களாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகள் சிலர், தங்களது வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் துணிச்சலாக நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருப்பார்கள். அந்த வரிசையில் ரஜினி படத்தில் வில்லியாக நடித்த 5 கதாநாயகிகளில் சண்டி ராணியாக விஜயசாந்தி சூப்பர் ஸ்டாரை மிரட்டி விட்டிருப்பார்.

விஜயசாந்தி: மன்னன் திரைப்படத்தில் விஜயசாந்தி ரஜினியின் மனைவி சண்டி ராணியாக நடித்து தனது வில்லத்தனமான நடிப்பை திரையில் வெளி காட்டி இருப்பார் . தனது கணவரையே எதிர்த்து மாஸ் காட்டி ஒரு தனி பெண்ணாக இத்திரைப்படத்தில் வலம் வந்திருப்பார். இவர்களுடன் குஷ்பூ, கவுண்டமணி ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Also Read: 47 அவார்டை குவித்த என் படத்தை பாராட்ட யாருமில்லை.. சூப்பர் ஸ்டாரை மறைமுகமாக தாக்கிய தயாரிப்பாளர்

ஸ்ரீவித்யா: 1989 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படமானது தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படம் மாமியார் மருமகனுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. படத்தில் ரஜினிகாந்த், அமலா, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்துள்ளனர் . ஸ்ரீவித்யா தனது வில்லத்தனமான நடிப்பை இப்படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார்.

ரம்யா கிருஷ்ணன்: படையப்பா திரைப்படம் ஒரு எவர்கிரீன் மூவியாக பார்க்கப்படுகிறது. திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி மற்றும் நாசர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் நீலாம்பரி ஆக ரம்யா கிருஷ்ணன் தனது வில்லத்தனமான அசாத்திய திறமையை மிரட்டி காட்டி உள்ளார். இன்றளவும் மக்கள் மனதில் நீலாம்பரி என்றால் ரம்யா கிருஷ்ணன் தான் என்ற அளவுக்கு தனது நடிப்பை காட்டியுள்ளார்.

Also Read: லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!

ஸ்ரீப்ரியா: 1980 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் கலந்த திரில்லர் திரைப்படம் திரைப்படம் பில்லா. இப்படமானது அமிதாப் பச்சன் நடித்த டான் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கி, சுரேஷ் பாலாஜி தயாரித்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர் இதில் ஸ்ரீபிரியா தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை அட்டகாசமாக வெளி காட்டி இருப்பார். மேலும் வணிக ரீதியாக வெற்றி பெற்று திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேல் ஓடியது.

ஜோதிகா:  திரைப்படம் ஆனது ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அநீதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நாசர், கேஆர் விஜயா, வடிவேலு போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக சந்திரமுகி ஆக ஜோதிகாவின் மூலம் தனது பகை உணர்வை வெளிப்படுத்தி காட்டியுள்ளனர். இத்திரைப்படமானது வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: ரஜினி தன் அம்மா அப்பா பற்றி சொல்லிய ஒரே தமிழ் படம்.. விசுவையே குழப்பிய பெயர்கள்

இவ்வாறு இந்த ஐந்து நடிகைகளும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அசர வைத்ததுடன், அந்தப் படங்களின் வெற்றிகளுக்கு காரணமாகவும் அமைந்திருப்பார்கள்.

Trending News