செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

பக்காவான கெமிஸ்ட்ரி, விஜயகாந்தை ரொமான்ஸ் செய்து கிறங்கடித்த 5 நடிகைகள்.. ‘ரா’-னு வந்தாலே கிறங்கி விழும் கேப்டன்

80களில் ரஜினிகாந்த், கமலஹாசன், மோகன் என பல நடிகர்கள் ஒரு ரவுண்டு வந்தாலும், புதுமையான நடிப்பிலும், நேர்த்தியான கதைக்களத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் விஜயகாந்த். விஜயகாந்தின் பல திரைப்படங்களில் அதிகமாக இரண்டு நடிகைகள் நடித்திருப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் ரா என்ற வார்த்தையில் தொடங்கும் பெயர் நடிகைகளோடு விஜயகாந்த் கெமிஸ்ட்ரியில் பட்டையை கிளப்பியுள்ளார். அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

ராதிகா: நடிகை ராதிகா 80களில் ரஜினிக்கு அடுத்தபடியாக, நடிகர் விஜயகாந்துடன் ஜோடி சேர்ந்து 10 படங்களுக்கும் மேலாக நடித்தவர். அதில் நானே ராஜா நானே மாதிரி, தென்பாண்டி சீமையிலே, நல்லவன், வீரபாண்டியன், தெற்கத்தி கள்ளன், உழைத்து வாழ வேண்டும் உள்ளிட்ட படங்கள் சக்கை போடு போட்டவை. அந்த வகையில் ராதிகா,விஜயகாந்துடனான கெமிஸ்ட்ரி அக்காலத்தில் கிசுகிசுக்கபட்டது.

Also Read: நட்புக்காக பிடிக்காத இயக்குனரின் படத்தில் நடித்த விஜயகாந்த்.. ஹிட் கொடுத்து வாய் அடைக்க வைத்த சம்பவம்

ராதா: நடிகை ராதா,விஜயகாந்துடன் சேர்ந்து 5 படங்களில் ஜோடிப்போட்டு நடித்தவர். இதில் அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம் உள்ளிட்ட படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது. அதிலும் முக்கியமாக அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் காதல், செண்டிமெண்ட் என இருவரும் பின்னிப்பெடலெடுத்திருப்பர். இப்படத்தில் இடம்பெற்ற பூவை எடுத்து வச்சு, உன் பார்வையில் ஓராயிரம் உள்ளிட்ட பாடல்களில் விஜயகாந்த், ராதாவின் ரொமான்ஸ் காட்சிகள் அடி தூளாக அமைந்திருக்கும்.

ரேகா: நடிகை ரேகா விஜயகாந்துடன் இணைந்து நடித்த 4 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. என் புருஷன் எனக்கு மட்டும் தான், தம்பி தங்க கம்பி, சொல்வதெல்லாம் உண்மை, நினைவே ஒரு சங்கீதம் உள்ளிட்ட படங்களில் ரேகா, விஜயகாந்தின் ரொமான்ஸ் பெரிதும் பேசப்பட்டது. அதிலும் என் புருஷன் எனக்கு மட்டும் தான், திரைப்படத்தில் காத்து ஊதக்காத்து பாடலில் ரேகா, விஜயகாந்த் செய்த ரொமான்ஸ் காட்சி இளசுகளை கிறங்கடித்தது எனலாம்.

Also Read: காமெடி நடிகருக்காக 15 பேரை அடித்து விரட்டிய விஜயகாந்த்.. சவுக்கு தோப்பில் கேப்டன் செய்த அட்டூழியம்

ரஞ்சிதா: நடிகை ரஞ்சிதா விஜயகாந்துடன் இணைந்து பெரிய மருது, சத்ரபதி, கருப்பு நிலா உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்தவர். பொதுவாக நடிகை ரஞ்சிதா அந்தரங்க காட்சிகளில் பின்னி பெடலெடுப்பவர். அதிலும் விஜயகாந்துடன் அவர் நடித்த மூன்று படங்களிலும் ரொமான்ஸில் இருவருமே கலக்கியிருப்பார். அதிலும் சத்ரபதி படத்தில் கொட்டும் மழையில் ரஞ்சிதா, விஜயகாந்திடம் தன் காதலை ப்ரொபோஸ் செய்யும் காட்சி செம ரொமான்டிக்காக இருக்கும்.

ரோஜா: விஜயகாந்துடன் இணைந்து தமிழ்செல்வன் படத்தில் மட்டுமே நடிகை ரோஜா சேர்ந்து நடித்தார். இப்படமும் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் ரோஜா,விஜயகாந்தின் கெமிஸ்ட்ரி ரசிக்கும் படி அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ஹிட்டான நிலையில், அதிலும் ஆசை கேப்பைக்களிக்கு ஆசை என்ற பாடல் இன்றுவரை பலரது விருப்ப பாடலாக உள்ளது.

Also Read: ஓவர் அழிச்சாட்டியம் பண்ணும் 8 நடிகர்கள்.. விஜயகாந்த் தலைமையில் நடக்கும் ஆறு மணி அவதாரம்

Trending News