புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

டாக்டர் படிப்பை படித்த 5 நடிகைகள்.. என்ன படித்தோம் என்பதை மறந்து விட்டு ஆட்டம் போடும் சாய் பல்லவி

சினிமாவில் என்னதான் நடிக்க விருப்பம் இருந்தாலும் அவர்களுக்கும் அவருடைய படித்த படிப்புக்கும் சம்பந்தமே இல்லாமல் சில நடிகைகள் இருக்கிறார்கள். அதிலும் அந்த நடிகைகள் அனைவரும் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு அதை கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காமல் முழு நேரமும் நடிப்பதில் மூழ்கி விட்டார்கள். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

அதிதி சங்கர்: இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அங்கீகாரத்தால் ஈசியாக சினிமாவிற்கு நடிகையாக நுழைந்து விட்டார். இவர் தமிழில் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மாவீரன் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கமிட்டாய் இருக்கிறார். அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்திலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். ஆனால் இவர் படித்ததோ டாக்டர். இவருடைய அப்பாவிற்காக டாக்டர் படிப்பை முடித்துவிட்டு இவருடைய ஆசைக்காக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Also read: விவாகரத்து நடிகருடன் ஜோடி போடும் அதிதி சங்கர்.. மாவீரனுக்கு பிறகு வரிசை கட்டும் வாய்ப்புகள்

சிவானி ராஜசேகர்: இவர் நடிகை மற்றும் மாடலிங்கில் ஆர்வம் உள்ளதால் அதிலிருந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவருடைய அப்பா ராஜசேகர் வரதராஜன் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். அதன் மூலம் சினிமாவிற்கு நடிக்க வந்து விட்டார். இவர் தமிழில் அன்பறிவு மற்றும் நெஞ்சுக்கு நீதி படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவர் படித்தது டாக்டர். அதை விட்டுட்டு மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வத்தை காட்டி வருகிறார்.

மானுஷ் சில்லர்: இவருக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதை மிகவும் விரும்பி செய்து வந்தார். பின்பு உலக அழகி பட்டத்தை பெற்றார். அடுத்ததாக கடந்த வருடம் ஹிந்தியில் வெளிவந்த சாம்ராஜ் பிருதிவிராஜ் படத்தில் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை வைத்து எப்படியாவது தமிழ் சினிமாவிலும் நடித்து விட வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு வருகிறார். ஆனால் இவர் படிப்புக்கும் இவர் செய்த வேலைக்கும் சம்பந்தமே இல்லாமல் தற்போது இருக்கிறார். அதாவது இவர் படித்தது (DRDO) ஒரு மருத்துவர் மற்றும் விஞ்ஞானி ஆவார்.

Also read: சக நடிகைகளை பொறாமை பட வைத்த சாய் பல்லவியின் 4 கதாபாத்திரம்.. தனுசுக்கு டஃப் கொடுத்த நடிகை

சாய் பல்லவி: இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக பிரபலமாக வலம் வருகிறார். இவர் பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் நடித்தது மலையாள படமாக இருந்தாலும் அனைத்து மொழிகளும் இவருடைய பார்வைக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். இதனைத் தொடர்ந்து தமிழில் மாரி 2, பாவ கதைகள் போன்ற பல படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். ஆனால் இவர் படித்தது என்னமோ டாக்டர். ஆனால் அதை மறந்து விட்டு சினிமாவில் படு சுட்டியாக ஆட்டம் போட்டு வருகிறார்.

இந்த நடிகைகள் எல்லாம் என்னதான் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்று நினைத்திருந்தாலும் இவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மறந்து விட்டு அதைவிட சினிமாவில் பேரும் புகழும் சம்பாதித்து விடலாம் என்பதற்காக மட்டுமே இதில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்கள்.

Also read: சமந்தா முதல் சாய் பல்லவி வரை.. டாப் ஹீரோயின்கள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

Trending News