வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பணத்தாசையால் வெப் சீரிஸிஸ் பக்கம் தவ்விய 5 நடிகைகள்.. மொத்தமாய் கவர்ச்சியில் இறங்கிய தமன்னா

Actress Tamanna: ஹீரோயின்களை பொறுத்தவரை என்னதான் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தாலும், ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவர்களுக்கு பட வாய்ப்பு குறைவது என்பது இயல்பு. இதைப் பொருட்டு வெப் சீரிஸிலும் களம் இறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.

அவ்வாறு ஒன்று இரண்டு வெப் சீரிஸில் நடிக்க வந்து தற்பொழுது பணத்துக்காக அதையே முழு முயற்சியாய் மேற்கொள்கின்றனர். அதில் பட வாய்ப்புக்காக வெப் சீரிஸ் பக்கம் சென்ற 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: சாமானியனை தொடர்ந்து குவியும் பட வாய்ப்பு.. ராமராஜனுடன் ஜோடி போடும் 46 வயது நடிகை

அஞ்சலி: தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அஞ்சலி. அங்காடி தெரு, லிசா, நாடோடிகள் 2 போன்ற படங்களில் தன் நடிப்பினை வெளிக்காட்டிய இவர் தற்பொழுது தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் பிறமொழியில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் தற்பொழுது இவர் வெப் சீரிஸில் மேற்கொண்ட ஜான்சி, ஃபால்ஸ் போன்ற சீரிஸிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் பெயரில் தற்பொழுது பகிஷ் கர்ணா என்னும் சீரிஸில் தெலுங்கில் நடித்து வருகிறார்.

தமன்னா: ஹிந்தியில் அறிமுகம் ஆகி அதன்பின் இவர் தமிழில் நடித்த கேடி, பையா, தில்லாலங்கடி போன்ற படங்களின் மூலம் தன் மார்க்கெட்டை உயர்த்தி கொண்ட இவர் நயன்தாரா, திரிஷா ஆகியோருக்கு நிகராக ரசிகர்கள் இடையே கனவு கன்னியாக வலம் வந்தவர். மில்க் பியூட்டி என அழைக்கப்படும் இவர் தற்பொழுது ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸில் இவர் மேற்கொண்ட நவம்பர் ஸ்டோரி, மாஸ்டர் செஃப் இந்தியா போன்றவை பெரிதும் பேசப்பட்டது. அதன்பின் ஹிந்தி மொழியில், ஜி கருடா என்னும் சீரிஸில் நடித்துள்ளார்.

Also Read: முட்டி மோதியும் வெற்றியை தொட முடியாத 5 ராசி இல்லாத நடிகர்கள்.. கரையேற முடியாமல் தவிக்கும் அருண்விஜய்

வாணி போஜன்: சின்னத்திரை, சீரியலில் நடித்து வந்த இவர் தற்பொழுது சினிமாவில் முன்னணி கதாநாயகி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு அம்னீஷியா, மிரல் போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் வெப் சீரிஸ் தொடரிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். ரேக்ளா, ஆர்யன் போன்றவை இவர் மேற்கொள்ளும் வெப் சீரியஸ் தொடர்களாகும்.

அமலாபால்: மைனா, தெய்வ திருமகள், ஆடை போன்ற படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா பால். ஆடை படத்திற்கு பிறகு தன் கவர்ச்சி நடிப்பை வெளிக்காட்டி பட வாய்ப்புகளை பெற்று வரும் இவர் தற்பொழுது வெப் சீரிஸ்களிலும் களமிறங்கி உள்ளார். ஓ டி டி தளங்களில், வெப் சீரிஸ் தொடர்பான  விக்டிம் ஹூ இஸ் நெஸ்ட் போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்தது.

Also Read: மிக பெரிய எதிர்பார்ப்பு, உதயநிதிக்கு வந்த தலைவலி.. மொத்தமும் புட்டுக்குன்னு போன மாமன்னன்

ரெஜினா கசாண்ட்ரா: கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானவர். தெலுங்கில் இவர் மேற்கொண்ட படங்கள் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்திருக்கிறது. ரொட்டீன் லவ் ஸ்டோரி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பவர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இவரு என்னும் தெலுங்கு படத்தில் இவர் மேற்கொண்ட நெகட்டிவ் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதன்பின் தற்பொழுது வெப் சீரிஸ்களும் ஆர்வம் காட்டி வரும் இவர் பார்டர், ஃப்ளாஷ் பேக், சூர்ப்பனகை போன்ற தொடரில் நடிக்கிறார்.

Trending News