செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அழகுக்காக சர்ஜரி செய்து பொம்மை போல் மாறிய 5 நடிகைகள்.. ஆபத்தில் முடிந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை

5 Actresses Did Surgery: நடிகைகள் அழகாக இருந்தால் மட்டும் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். அதனால்இயற்கை அழகுடன் இருக்கும் பொழுது அதைவிட இன்னும் சூப்பராக இருக்க வேண்டும் என்று செயற்கை முறையில் பல சர்ஜரிகளை செய்து பொம்மை போல் சில நடிகைகள் மாறி இருக்கிறார்கள். அப்படி ஆப்ரேஷன் பண்ணி கேரியரை தக்க வைத்துக் கொண்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

ஸ்ருதிஹாசன்: 37 வயதாகும் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிப்பு மட்டுமின்றி பல பாடல்களையும் பாடி இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் சில ஆண்டுகளுக்கு முன் மூக்கில் அடிபட்டுவிட்டது. அதை மாற்றி இன்னும் அழகாக ஆக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் இதை செஞ்சதுக்கு பிறகு தான் இவரை பார்க்கும் பொழுது ஏதோ ஒரு வித்தியாசமான இயற்கைக்கு அப்பாற்பட்ட மாதிரி முகம் ஒத்துப் போகாத அளவிற்கு இருக்கிறது.

ஷில்பா ஷெட்டி: பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தமிழில் குஷி படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் டாப் ஹீரோகளுக்கு ஜோடி சேர்ந்து முன்னணி கதாநாயகியாக ஜொலித்தார். அத்துடன் இவருடைய அழகுக்கு குறையே சொல்ல முடியாத அளவிற்கு பார்க்க லட்சணமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அப்படிப்பட்டவர் இன்னும் அழகை மெருகேற்றுவதற்காக மூக்கு, உதடு மற்றும் கண் இமை அனைத்தையும் அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சர்ஜரி செய்து இருக்கிறார்.

Also read: கோல்டன் ஸ்பூன் குழந்தையின் சொத்து மதிப்பு.. ஸ்ரீதேவியை ஓரம் கட்டிய குட்டி புலி ஜான்வி கபூர்

ஸ்ரீதேவி: எத்தனையோ நடிகைகள் புதுசு புதுசாக வந்தாலும் எப்பொழுதுமே மறக்க முடியாத அளவிற்கு ஒரு சில நடிகைகள் மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பார்கள். அந்த லிஸ்டில் எப்பொழுதுமே ஸ்ரீதேவிக்கு முதல் இடம் இருக்கும். அதற்கு காரணம் இவருடைய நடிப்பும், முகத்தில் ஒரு தெளிவு, கள்ளம் கபடம் அற்ற பேச்சு அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில் எப்போதுமே இளமையாக ஜொலிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி டயட் இருந்து உடம்பை குறைத்துக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்தார். ஆனால் இதுவே இவருக்கு கடைசியில் பிரச்சினையாக முடிந்து ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போய்விட்டார்.

ஹன்சிகா: கொழு கொழுவென்று கன்னமும், இவருடைய தோற்றமும் தான் இவருக்கு மிகப்பெரிய ஹைலைட்டாகவே இருந்தது. அதனாலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படிப்பட்ட இவர் தொடர்ந்து தனக்கு வாய்ப்பு வேண்டும் என்பதற்காகவே இன்னும் அழகாக வேண்டும் என்று ஆசைப்பட்டு முகத்தில் சர்ஜரி செய்து கொண்டார். அனல் அதன் பிறகு முகம் கொஞ்சம் வலுவடைந்து பார்ப்பதற்கு செயற்கையாகவே மாறிவிட்டார்.

ஸ்ரேயா: தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பின் இன்னும் தன்னுடைய தோற்றத்தை அழகாக காட்ட வேண்டும் என்பதற்காக உதடு மற்றும் மூக்கு பாகங்களை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு இவரை பார்ப்பதற்கு ஏதோ ஒரு பொம்மை போலவே செயற்கை அழகை ஒட்டிக்கொண்டது போல் மாறிவிட்டார்.

Also read: சந்தேகப்பட வைத்த ஸ்ரீதேவியின் மரணம்.. போனி கபூருக்கு நடந்த விசாரணையில் வெளியான உண்மை

Trending News