வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அழகாக காட்டிக்கொள்ள மூக்கு, உதடு அறுவை சிகிச்சை செய்த 5 நடிகைகள்.. மெய்சிலிர்க்க வைத்த நந்தினி

Actor Aishwarya Rai: ஒரு ஹீரோயினாக படத்தில் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக தன் உடல் பாகங்களை மாற்றுவது தற்பொழுது இயல்பாக மாறிவிட்டது. இவை அவரவர் விருப்பம் கொண்டு தன் உடலின் தன்மைக்கு ஏற்ப செய்து வருகின்றனர்.

அதிலும் இவற்றை பெரும்பாலும் சினிமாவில் இருக்கும் முக்கிய செலிபிரிட்டிங்களே செய்து வருகின்றனர். பட வாய்ப்புக்காகவும், தன்னை திரையில் அழகாக காட்ட வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற செயல்களை செய்த 5 நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

Also Read: திருந்தாத விஜய், திருந்தாத அரசியல்வாதிகள்.. தெரிந்தும் மீண்டும் மீண்டும் பிரச்சினைகள் மாட்டிக்கொள்ளும் தளபதி.!

ஐஸ்வர்யா ராய்: உலக அழகி என பெயர் பெற்று மேலும் இந்திய சினிமாவில், முன்னணி கதாநாயகியாக தன்னை நிலை நிறுத்தி கொண்டவர் ஐஸ்வர்யா ராய். விஞ்ஞான வளர்ச்சியில் இது போன்ற செயல்களில் பெரும் தவறு ஒன்றும் இல்லை என கூறும் இவர் இது போன்ற அறுவை சிகிச்சை எல்லாம் அவரவர் விருப்பம் இதற்கு யாரும் ஒப்புதல் தெரிவிக்க தேவையில்லை என கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய். இவர் தன் மூக்கு, உதடு மற்றும் கண்ணம் போன்ற பகுதிகளை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றி அமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி ஹாசன்: பிரபலத்தின் மகளாகவும் மற்றும் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவரிடம் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து கேட்கையில், இது அவரவர் விருப்பம் நான் யாருக்கும் இதை பரிந்துரை செய்ய மாட்டேன். என் மூக்கில் அடிபட்டதால், எனக்கு பிடிக்கவில்லை அது மட்டும் இல்லாமல் என்னுடைய முகம் தோற்றத்திற்கு பொருத்தமாக என் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் என கூறியுள்ளார்.

Also Read: பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த அஜித்.. விடாமுயற்சிக்கு இருந்த பிரச்சினை அனைத்தும் சரி செய்த ஏகே

சமந்தா: தன் நடிப்பாலும், அழகாலும் சினிமாவில் தனக்கென்று ரசிக பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் சமந்தா. ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் தன் அழகை கூட்ட 2012ல் தன் மூக்கையும், உதட்டையும் தன் முகத்தோற்றத்திற்கு பொருத்தமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதன்பின் அவர் இது குறித்த செய்தி எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பட வாய்ப்புக்காக இது போன்ற செயல்களில் இவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்: மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கு படத்தில் மகேஷ்பாபு உடன் இணைந்து நடித்த படம் தான் சர்கரு வாரி பட்டா. இப்படம் கலவையான விமர்சனங்களை பற்றி தந்தது. இதை குறித்து இவரின் உதடுக்கான விமர்சனங்கள் வந்த நிலையில் தன் உதட்டை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தேவர்மகன் சாயலில் மாமன்னனாக அவதாரம் எடுத்த வடிவேலு.. எதிர்பார்ப்பை மிரள விட்ட ட்ரெய்லர்

ப்ரியாமணி: தமிழில் பருத்திவீரன் படத்தில் கார்த்தி உடன் இணைந்து முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ப்ரியாமணி. இவர் தற்பொழுது 40 வயதை நெருங்கி உள்ள நிலையில் இவர் மேற்கொள்ளும் பட வாய்ப்புக்காக தன்னை இளமையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதைத்தொடர்ந்து தன்னுடைய மூக்கு, உதடு, பின்புறம் போன்ற பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News