ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

விஜய்யுடன் நடித்து பாலிவுட் போன 5 நடிகைகள்.. தளபதிக்கு ஐஸ் வைத்து எஸ்கேப் ஆன பூஜா ஹெக்டே

5 actresses who went to Bollywood after acting with Vijay: தளபதி விஜய்யை கொண்டாடும் ரசிகர்கள் அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகளை கொண்டாட தவறியது இல்லை. அவருடன் நடித்த நடிகைகள் விஜய் உடனான வெற்றிக்கு பின் தனது மார்க்கெட்டை ஏற்றி பிற மொழிகளிலும் வெற்றிக்கொடி நாட்டி உள்ளனர்.

பிரியங்கா சோப்ரா: பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவிற்கு அறிமுகம் கொடுத்தது 2002 இல் வெளிவந்த விஜய்யின் தமிழன் தான். முதல் படமே ஆனாலும் நடனத்திலும் காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருந்தார். இதற்கு பின் தான் பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் கட்டம் கட்ட ஆரம்பித்தார்.

இஷாகோபிகர்: விஜய் உடன் நெஞ்சினிலே படத்தில் ஜோடி சேர்ந்த இஷா கோபிகரை விஜய் தான் இப்படத்தில் நடிக்க பரிந்துரை செய்ததாக தகவல்கள் கசிந்தது. பாலிவுட்டில் பல சர்ச்சையான படங்களிலும் துணிச்சலாக நடித்த இஷா கோபிகர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் சில காட்சிகளில் தோன்ற இருப்பது கூடுதல் செய்தி.

Also read: சோலோ ஹீரோயின் கதையா.? உடனே ஓகே சொல்லும் 5 நடிகைகள், நயன் மார்க்கெட் கம்மியானதால் வந்த விளைவு

பூஜா ஹெக்டே: தமிழில் முகமூடி மூலம் அறிமுகம் ஆகியிருந்தாலும் விஜய்யின் பீஸ்ட்க்கு பின் புகழிலும், மார்க்கெட்டிலும் உச்சத்திற்கு சென்றார் பூஜா ஹெக்டே. விஜய் ரசிகர்கள்  தளபதியை பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என வேண்டுகோள் வைக்க அவரைப் பற்றி ஒரு வார்த்தையில் கூற முடியாது  இனிமையானவர் என்று சொல்லி தளபதி தலையில் ஐஸ் வைத்து ரசிகர்களிடம் இருந்து எஸ்கேப் ஆனார் பூஜா. பீஸ்ட்க்கு பின் பாலிவுட்டில் இவர் முன்னணி நடிகர் சல்மான் கான் உடன் நடித்த படம் வெற்றி நடை போட்டது.

ராஷ்மிகா மந்தனா:  கன்னடம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா விஜய்யின் தீவிர ரசிகை ஆவார். விஜய்யுடன் இவர் நடித்த வாரிசு படத்திற்கு பின் இவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த  ரன்பீர் கபீர் உடனான அனிமல் படம் ஹிட் ஆனதை தொடர்ந்து மும்பையில் செட்டிலாக திட்டம் போட்டு விட்டார் ராஸ்மிகா.

அசின்: ஆரம்ப காலங்களில் தமிழில் ராசி இல்லாத நடிகை என வர்ணிக்கப்பட்ட அசின்  விஜய் உடன் சிவகாசி, போக்கிரி, காவலன் என மூன்று  ஹிட்  படங்களை கொடுத்து  முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் களமிறங்கிய அசின் பல வெற்றி படங்களுக்கு பின் திருமணத்திற்கு பின் நடிப்பதை தவிர்த்தார்.

Also read:2023ல் அதிக சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. ஓவர் நைட்டில் ஒபாமா ஆன த்ரிஷா

Trending News