வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

முத்தின கத்திரிக்காயை காதலித்து திருமணம் செய்த 5 நடிகைகள்.. தோழிக்கு வேட்டு வைத்த காவ்யா மாதவன்

Manju Warrier: நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொள்வது அவர்களுடைய ரசிகர்களால் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும். ஆனால் ஒரு சில நடிகைகளின் திருமணங்கள் எல்லோரையும் வாயை பிளக்கும் அளவுக்கு செய்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் திருமணம் செய்து கொண்ட ஆண்களின் வயது தான். இப்படிப்பட்ட ஐந்து நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

முத்தின கத்திரிக்காயை காதலித்து திருமணம் செய்த 5 நடிகைகள்

ஆர்யா – சாயீஷா: ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் பிளேபாயாக இருந்தவர் தான் ஆர்யா. நிலா, நயன்தாரா என இவருடைய காதல் சர்ச்சைகள் அவ்வப்போது கிளம்பி இருக்கிறது. இப்போது இவர் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்கு காரணம் அவருடைய மனைவி சாயீஷாவை திருமணம் செய்த பிறகுதான். ஆர்யா மற்றும் சாயீஷா இருவருக்கும் கிட்டத்தட்ட 17 வயது வித்தியாசம். இவர்களுடைய திருமண சமயத்தில் இது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

நஸ்ரியா-பகத்: நேரம், ராஜா ராணி அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் தேவதையாக அமர்ந்தவர் தான் நஸ்ரியா. தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ரீச் இவருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் போதே, நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 13 வயது வித்தியாசம். வயது மட்டுமில்லாமல் அந்த சமயத்தில் பகத் பாசில் தோற்றத்திற்காகவும் கேலிக்குள்ளானார்.

Also Read:அஜித், விஜய் படத்தை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி கூறிய காரணம்.. கேப்பில் ஸ்கோர் செய்த த்ரிஷா

பிரகாஷ் ராஜ் – போனிவர்மா: நடிகர் பிரகாஷ் ராஜ் ஏற்கனவே, பிரபல கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை நடிகை லலிதாவை திருமணம் செய்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இருந்த திருமண உறவு விவாகரத்தில் முடிந்த பிறகு, போனிவர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரகாஷ்ராஜ் திருமணம் செய்யும்போது அவருக்கு வயது 45. இந்த தம்பதிகள் 13 வயது வித்தியாசம் உடையவர்கள்.

திலிப்-காவ்யா மாதவன்: பிரபல மலையாள நடிகர் திலீப் ஏற்கனவே நடிகை மஞ்சு வாரியரை 16 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டார். நடிகை காவ்யா மாதவன் மஞ்சுவாரியரின் நெருங்கிய தோழியாக இருந்து கொண்டு, திலீப்பை காதலித்து வந்தார். மஞ்சு வாரியர் இந்த விஷயம் தெரிந்து விவாகரத்து செய்த பிறகு, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திலீப் மற்றும் காவ்யா மாதவனின் வயது வித்தியாசம் 17 ஆகும்.

ஆசிஷ் வித்யார்த்தி – ரூபாலி இவாங்கா: கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்தவர் தான் ஆசிஷ் வித்யார்த்தி. இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் சமீபத்தில் தன்னுடைய அறுபதாவது வயதில் ரூபாலி இவாங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் பத்து வருடங்கள். ரூபாலி இவாங்கா நடிகை இல்லை என்றாலும் மாடலிங் துறையை சேர்ந்தவர்.

Also Read:ஹீரோவாக களமிறங்கும் தனுஷ் குடும்ப வாரிசு.. பச்சைக்கொடி காட்டிய அஜித் பொண்ணு

Trending News