செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பணத்திற்காக ஐட்டம் டான்சராக மாற்றப்பட்ட 5 நடிகைகள்.. இடுப்பழகை காட்டி மயக்கிய சிம்ரன்

Actress Simran: ஹீரோக்களை விட ஹீரோயின்கள், தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, பல முயற்சிகளை போட வேண்டி இருக்கிறது. அவ்வாறு ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அதை தொடர்ந்து கவர்ச்சி நடிப்பையும் மேற்கொள்கின்றனர்.

ஆரம்ப காலகட்டத்தில் இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்க மறுத்தவர்கள் பணத்திற்காகவும், வாய்ப்புக்காகவும் தன்னை தயார் செய்து கொள்கின்றனர். அவ்வாறு முன்னணி ஹீரோயின் ஆக இருந்தும் பணத்திற்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: பணத்திற்காக ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் தளபதி.. பக்கா அரசியல்வாதியாக மாறிய விஜய்

நயன்தாரா: தற்பொழுது முன்னணி ஹீரோயின் ஆக கொடி கட்டி பறக்கும் லேடி சூப்பர் ஸ்டார் தான் நயன்தாரா. இவர் மலையாள படத்திற்கு பிறகு தமிழில் அறிமுகமான தன் ஆரம்ப கட்டத்திலேயே ரஜினி, சரத்குமார், விஜய் போன்ற பிரபலங்களோடு இணையும் வாய்ப்பைப் பெற்றார். அதோடு இல்லாமல் பணத்திற்காக சிவாஜி, சிவகாசி, எதிர்நீச்சல் போன்ற படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா: தெலுங்கு படங்களில் அறிமுகமாகி அதன் பின் தமிழில் நீ தானே என் பொன்வசந்தம் என்னும் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக களம் இறங்கி இருப்பார் சமந்தா. அதை தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக பல பிரபலங்களோடு இணைந்து நடித்து ரசிகர்களிடையே கனவு கன்னியாக வலம் வந்தார். இருப்பினும் வாய்ப்புக்காக புஷ்பா படத்தில் ஐட்டம் டான்ஸ் ஏற்று நடித்து தன் மார்க்கெட்டை உயர்த்தி வருகிறார்.

Also Read: தோற்றத்தை பார்த்து நடிக்க மறுத்த நடிகைகள்.. பணத்தாலேயே அடித்து அனுபவித்த நடிகர்

சிம்ரன்: தமிழ் சினிமாவில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு தன் இடை அழகால் கொடி கட்டி பறந்தவர். நடிப்பில் அசத்திய இவரின் நடனம் பெரிதும் பேசப்பட்டது. அதிலும் குறிப்பாக 2002 ல் வெளிவந்த யூத் படத்தில் விஜய்யுடன் இவர் போட்ட ஐட்டம் டான்ஸ் வேற லெவலில் ரீச் ஆனது. இன்றும் தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

கிரண்: ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கிரண். தன் நடிப்பால் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்ட இவர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இருப்பினும் தன் கவர்ச்சி நடிப்பிற்கு தான் மார்க்கெட் உண்டு என்பதை உணர்ந்து ஐட்டம் டான்சில் களம் இறங்கி தற்பொழுது சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பை இழந்து உள்ளார்.

Also Read: தேவர்மகன் சாயலில் மாமன்னனாக அவதாரம் எடுத்த வடிவேலு.. எதிர்பார்ப்பை மிரள விட்ட ட்ரெய்லர்

சாயிஷா: 2017ல் வனமகன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன்பின் இவர் மேற்கொண்ட படங்கள் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின் சில இடைவேளைக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த பத்து தல படத்தில் ஐட்டம் டான்ஸ் ஒன்றில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

Trending News