புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய் ஆண்டனி கூட நடிச்சு பத்து பைசா பிரயோஜனம் இல்ல.. பட வாய்ப்பு இல்லாமல் கதறும் 5 நடிகைகள்

இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகி பின்னர் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது இசையை போலவே இவரது நடிப்பும் சற்று வித்தியாசமாகவும், இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும். இருந்தாலும் இவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு பெரிதாக வாய்ப்பில்லாமல் காணாமல் போயுள்ளனர். இதனிடையே இவருடன் ஜோடி போட்ட 5 நடிகைகள் வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

மியா ஜார்ஜ்: மலையாள நடிகையான இவர் அமரக்காவியம் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். வெகு சீக்கிரத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த இவர், தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இதனிடையே விஜய் ஆன்டனியுடன் இணைந்து எமன் படத்தில் நடித்த மியா ஜார்ஜ் அதோடு பட வாய்ப்பு தமிழில் இல்லாமல், அப்படியே கல்யாணம் பண்ணி குடும்பம், குட்டி என செட்டிலாகியுள்ளார்.

Also Read: தளபதிக்கு சவுக்கடி கொடுத்த விஜய் ஆண்டனி.. உசுப்பேத்தி வேடிக்கை பாக்குறீங்களா என ஆதங்கம்

ஆத்மிகா: ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து மிசையமுறுக்கு படத்தில் நடித்த நடிகை ஆத்மிகா தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி நடித்தார். அந்த சமயத்தில் விஜய் ஆன்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். இப்படத்தின் தோல்வியால் வாய்ப்பில்லாமல் போன இவர், தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அண்மையில் விஜய் ஆன்டனியுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததற்கு கால்ஷீட் எல்லாம் கொடுத்துவிட்டு பட்டதே போதுமென வேறொரு நடிகருடன் சென்றுவிட்டார்.

அருந்ததி நாயர்: மலையாள நடிகையான இவர், தமிழில் சில படங்களில் நடித்து, பின்னர் விஜய் ஆன்டனியுடன் இணைந்து சைத்தான் படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டு கதாபாத்திரத்தில் நடித்த அருந்ததி நாயர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாததால் மலையாளத்துக்கே சென்றுவிட்டார்.

Also Read: என் லெவலுக்கு விஜய் ஆண்டனி கூட எல்லாம் நடிக்க முடியாது.. கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய ஹீரோயின்

சாத்னா டைட்டஸ்: நடிகர் விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையை புரட்டிப்போட்ட படம் தான் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம். இந்தாண்டு வெளியான பிச்சைக்காரன் 2 படத்தை காட்டிலும் பிச்சைக்காரன் படத்திற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு இந்தப் படம் ஹிட்டானத்திற்கு காரணம் படத்தின் கதை ஒரு பக்கம் இருந்தாலும், படம் முழுவதும் அழகு தேவதையாக வலம் வந்த நடிகை சாத்னா டைட்டஸும் முதல் காரணம். ஆனால் இவருக்கும் பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் கல்யாணம் பண்ணி செட்டிலாகிவிட்டார்.

நிவேதா பெத்துராஜ்: தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலமாக அறிமுகமான இவர், மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார். அந்த வகையில் திமிரு பிடிச்சவன் படத்தில் விஜய் ஆண்டனியுடன் போலீஸ் கெட்டப்பில் ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால் இப்படத்தின் கலவையான விமர்சனத்தால் இவருக்கு அதோடு தமிழில் வாய்ப்பில்லாமல் போனது. தற்போது அக்கட தேசத்தில் சென்று கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

Also Read: நல்ல படங்கள் நடித்தும் ராசி இல்லாமல் தோற்றுப் போன 5 நடிகர்கள்.. வேகம் இருக்கிற அளவுக்கு விவேகம் இல்லாத விஜய் ஆண்டனி

Trending News