திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அப்பிடில்லாம் கவர்ச்சி காட்ட முடியாது என ஜெயித்த 5 நடிகைகள்.. ஒரு படி மேலே சென்ற சாய் பல்லவியின் இமேஜ்

ஹீரோயின்களை பொறுத்தவரை படத்தில் வாய்ப்பு கிடைக்க ஒரு சில விஷயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு ஒரு சில நேரங்களில் படத்திற்கு ஏற்ப கவர்ச்சி காட்சிகளையும் ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகுகின்றனர்.

இது போன்ற எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நான் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று உறுதியாக கூறி வாய்ப்பு இழந்தவர்களும் உண்டு. அவ்வாறு நீங்கள் சொல்வதெல்லாம் செய்ய மாட்டேன் என்று கூறி ஜெயிச்ச 5 நடிகைகள் பற்றி இங்கு காணலாம்.

Also Read: நடிப்பை தாண்டி ஷாப்பிங் மாலில் அதிகம் முதலீடு செய்யும் விஜய்.. மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும் திரையுலகம்

அபர்ணாதாஸ்: மலையாள படங்களில் மூலம் அறிமுகமானவர் அபர்ணாதாஸ். பீஸ்ட் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வரும் இவர் டாடா என்னும் படத்தில் ஹீரோயினாக இடம்பெற்று இருப்பார். இப்படத்தில் இவரின் நடிப்பு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. மேலும் என் படங்களில் கவர்ச்சி இருக்காது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதற்கு ஏற்ற படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறி பட வாய்ப்பை பெற்று வருகிறார்.

நித்யா மேனன்: தெலுங்கு படங்களின் மூலம் அறிமுகமானவர் நித்யா மேனன். திரைத்துறையில் நடிக்க விருப்பம் இல்லாத இவர் பத்திரிக்கையாளராக தான் விரும்பியதாக கூறப்படுகிறது. அதன்பின் ஒரு சில படங்களில் நடித்த இவர் மெர்சல், காஞ்சனா 2 போன்ற படங்களில் கதாநாயகியாக நல்ல விமர்சனத்தை பெற்றார். அதிலும் குறிப்பாக திருச்சிற்றம்பலம் படத்தில் இவரின் எளிமையான நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

Also Read: பார்ட்டியில் யாஷிகாவுடன் இறுக்கி அணைச்சு ஒரு முத்தா.. சர்ச்சையை கிளப்பிய அஜித் மச்சான் புகைப்படம்

கீர்த்தி சுரேஷ்: மலையாள படங்களில் மூலம் அறிமுகமாகி, அதன்பின் தமிழில் இவர் மேற்கொண்ட படங்களான ரஜினி முருகன், தொடரி, பைரவா, சாமி 2 ஆகிய படங்களில் நல்ல விமர்சனத்தை பெற்று மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர். இவர் எந்த படங்களிலும் கவர்ச்சியான நடிப்பை ஏற்காமல் இன்றுவரை தனக்கேற்ற கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி: பிரேமம் படத்தின் மூலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தவர் சாய் பல்லவி. மேலும் தமிழில் மாரி 2, என் ஜி கே, கார்கி போன்ற படங்களில் தன் எளிமையான நடிப்பை வெளிப்படுத்தியவர். மேலும் திரைத்துறையில் மேக்கப் இல்லாத ஆர்டிஸ்ட் என்ற பெருமையும் கொண்டவர். படங்களில் கவர்ச்சியான நடிப்பை தவிர்த்து தனக்கு ஏற்ற கதாபாத்திரம் கொண்ட படங்களை ஏற்று நடித்து வருகிறார். மேலும் இது போன்ற காரணத்தால் தன் இமேஜை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு சொல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read: ஆசைக்கு இணங்க மறுத்த நடிகை.. பலான கேசில் சிக்க வைத்து பழி தீர்த்த நடிகர்

ஷீலா ராஜ்குமார்: நாடகத்தில் ஆர்வம் கொண்ட இவர் சினிமாவில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரௌபதி, மண்டேலா ஆகிய படங்கள் இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. மேலும் இதுபோன்ற கதாபாத்திரத்திலேயே தன் நாட்டத்தை செலுத்தும் இவர் ஒரு பொழுதும் கவர்ச்சியான படங்களை ஏற்க மாட்டேன் என்பதில் தெளிவாக இருக்கிறார்.

Trending News