வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹீரோயின் சொன்னா யாரும் நம்பல ஆனா வெற்றி பெற்ற 5 நடிகைகள்.. தமன்னா, சமந்தாவையே ஓரம் கட்டிய மலைவாசி பெண் நடிகை

நடிகைகள் என்றாலே வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும், அவர்களது தலை முதல் கால் வரை மாடல் போல் மெல்லிய தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக சினிமாவில் உள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் மாற்றிவிட்டு அழகை காட்டிலும் நடிப்புதான் முக்கியம் என வலம் வந்து சாதித்து கொண்டிருக்கும் 5 நடிகைகளை தற்போது பார்க்கலாம்.

சாய் பல்லவி: நடன கலைஞரான சாய்பல்லவி மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் முகம் முழுதும் கன்னங்களில் பருக்கள், மாநிறமான தோல் நிறம் என மேக்கப் இல்லாமல் மலர் டீச்சராக வலம் வந்து இப்படியும் நடிகை இருக்கலாமா என்பதை இந்திய சினிமாவுக்கே புதிதாக உணர்த்தினார். படங்களில் கவர்ச்சி காட்டாமல் தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கும் சாய்பல்லவி முன்னணி நடிகைகளையே ஓரம்கட்டி வருகிறார்.

Also Read: சாய் பல்லவி காதல் கருமத்தை செய்யாமல் இருக்க இவர் தான் காரணம்.. தவறாகப் பேசிய 2 ஹீரோக்கள்

ஐஸ்வர்யா ராஜேஷ்: பார்க்க நம் பக்கத்துக்கு வீட் டு பொண்ணு மாதிரி இருக்கும் இவர், இன்று கோலிவுட்டையே தன் வசப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் இவரது தோற்றத்தை பார்த்து கிராமப்புற கதாபாத்திரங்களில் நடித்த இவர், பின்னாளில் கருப்பாக இருப்பவர்கள் தான் மாடல் உடையில் அழகாக வலம் வர கூடியவர்கள் என்பதை நிரூபித்தவர்.

நித்யா மேனன்: ஹீரோயின் என்றால் உயரமாகவும், மெல்லிய உடலமைப்பில் இருக்க வேண்டும் என்பதை தூக்கியெறிந்த நடிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நித்யா மேனன் குள்ளமாகவும், உடல் பருமனாகவும் தான் பல படங்களில் இவர் நடித்து வருகிறார். இன்று வரை தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Also Read: ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்த 5 அற்புதமான கதைகள்.. ஆண்களுக்கு சவுக்கடி கொடுத்த கிரேட் இந்தியன் கிச்சன்

நந்திதா தாஸ்: ஹீரோயின் என்பதற்கு எந்த ஒரு லட்சணமும் இல்லாமல் இன்று வரை 10 மொழிகளுக்கு மேல் தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நந்திதா தாஸ். தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து அழகி உள்ளிட்ட படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படங்களை தொடர்ந்து அவருக்கு பாலிவுட், ஹாலிவுட் என பிற மொழிகளில் நடித்து பிரபலமானார்.

லிஜோமோல் ஜோஸ்: மலையாள நடிகையான இவர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான சிவப்பு,மஞ்சள், பச்சை படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் அக்காவாக இவரது நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. நம் குடும்பத்தில் உள்ள ஒரு பெண் போல இவரது முகப்பாவனை இருந்ததால் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.அதே சமயத்தில் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் நம்மை கண் கலங்க வைத்திருப்பார்.

Also Read: அந்த மாதிரி விஷயத்தில் தமிழ் ஹீரோக்கள் ரொம்ப மோசம்.. கழுவி ஊற்றிய நித்யா மேனன்

Trending News