திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முதல் படமே மரண ஹிட் கொடுத்த 5 நடிகைகள்.. அருவியாய் மிரள விட்ட அதிதி

Actress Aditi Balan: தன் திறமைக்கு ஏற்ற நடிப்பை வெளிகாட்டி தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஏராளம். அவ்வாறு தான் மேற்கொண்ட கதாபாத்திரம் மூலம் சிறப்புற நடித்திருப்பார்கள்.

மேலும் இதுவே அவர்களுக்கு அடுத்த கட்ட வாய்ப்புகளுக்கு உறுதுணையாய் அமைந்திருக்கும். அவ்வாறு தனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பில் மரண ஹிட் கொடுத்த 5 நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

Also Read: விவாகரத்தை ட்ரெண்ட் ஆக்கிய 5 டிவி தொகுப்பாளர்கள்.. ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண உறவு!

அதிதி பாலன்: மாடல், நடனம் மற்றும் நடிப்பு போன்ற பல திறன் கொண்ட இவர் 2017ல் மேற்கொண்ட படம் தான் அருவி. தன் எதார்த்தமான நடிப்பால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்த இவரின் கதாபாத்திரம் பல விருதுகளையும், புகழையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து மலையாளத்திலும் இவர் நடிப்பை மேற்கொண்டு வருகிறார். மேலும் நவரச, ஸ்டோரி ஆப் திங்ஸ் போன்ற தொடர் மூலம் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

ஷாலினி: குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமாகி பல படங்களை மேற்கொண்டு அதன் பின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தான் ஷாலினி. அவ்வாறு 1997ல் மலையாள படத்தின் ரீமேக் காண காதலுக்கு மரியாதை என்னும் படத்தில் தமிழில் ஹீரோயினாக இடம்பெற்றார். இவர் ஹீரோயின் ஆக ஏற்ற முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. ஆனால் தற்பொழுது சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரீ என்ட்ரி-யில் பட்டைய கிளப்பிய மேடியின் 5 திரைப்படங்கள்.. இரண்டு வருடம் சினிமாவுக்கு பிரேக் கொடுத்த மாதவன்

மீரா ஜாஸ்மின்: மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் 2002ல் ரன் என்னும் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக இணைந்து நடித்தவர் தான் மீரா ஜாஸ்மின். இப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இவர்கள் இருவரின் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் இவர் அப்படத்தின் மூலம் தன் அடுத்த கட்ட பட வாய்ப்புகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரித்திகா சிங்: நடிப்பிலும் மற்றும் குத்து சண்டை விளையாட்டிலும் தன் திறமையை வெளிக்காட்டியவர் ரித்திகா சிங். தன் திறமையை வெளிக்காட்டும் வாய்ப்பாய் இறுதி சுற்று என்னும் படத்தில் நடித்த இவர் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டார். அதன் பின் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read: ஒரே உருவ ஒற்றுமையில் இருக்கும் 2 நடிகர்கள்.. இன்றுவரை அடையாளத்துக்காக போராடும் சூப்பர் ஸ்டார் வில்லன்

லட்சுமி மேனன்: மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் 2012ல் கும்கி படத்தின் கதாநாயகியாக வலம் வந்தவர் தான் லட்சுமி மேனன். இவரின் எதார்த்தமான நடிப்பால் இப்படத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதன் பின் சுந்தர பாண்டியன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக தற்பொழுது சந்திரமுகி 2 வில் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News