திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தியேட்டரில் முகம் சுழிக்க வைத்த 5 அடல்ட் படங்கள்.. சீரழிந்து சின்னாபின்னமாகும் சினிமா

பொதுவாக மற்ற மொழிகளை கம்பேர் பண்ணும் போது தமிழில் கோலிவுட்டில் படங்கள் அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களால் விரும்பப்படாது. எனினும் அவ்வப்போது சில இயக்குனர்கள் அடல்ட் படங்களை எடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். மேலும் இந்த படங்கள் மக்களை மிகவும் முகம் சலிக்கவும் வைத்திருக்கிறது.

பல்லு படாம பாத்துக்க: 2018 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் வரதாஜா இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, ஜெகன், நான் கடவுள் ராஜேந்திரன் நடித்த திரைப்படம் பல்லு படாம பாத்துக்க. முழுக்க முழுக்க டபுள் மீனிங், அடல்ட் காட்சிகள் என இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். விசாரணை, குண்டு போன்ற நல்ல படங்களில் நடித்த தினேஷ் இந்த படத்தில் நடித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இருட்டு அறையில் முரட்டு குத்து: இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டு பாகங்களாக வெளிவந்தது. இந்த படத்தின் போஸ்ட்ருக்கே பல எதிர்ப்புகள் கிளம்பின. கௌதம் கார்த்திக், யாசிகா ஆனந்த் முதல் பாகத்தில் நடித்திருந்தனர். கௌதம் கார்த்திக்கு இதற்கு பட வாய்ப்புகள் படிப்படியாக குறைந்தே போயின.

பெஸ்டி: பெஸ்டி திகில் நிறைந்த அடல்ட் படம். இந்த படத்தில் அசோக் மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்தனர். காதலர்கள் இருவரும் டேட்டிங் செல்லும் இடத்தில மாட்டிக்கொள்வதும் அவர்களுக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களும் கலந்த அடல்ட் படம் இது.

90ml: 90 ml திரைப்படம் முழுக்க முழுக்க பெண்களை வைத்து எடுக்கப்பட்ட அடல்ட் படம். இந்த படத்தில் ஓவியா லீட் ரோலில் நடித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 1 க்கு பிறகு ஓவியாவுக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அதை ஓவியாவே இந்த படத்தில் கெடுத்துக்கொண்டார். காதல், காமம், போதை, தன்பாலின உறவு என மொத்தமாக ரசிகர்களின் எதிர்ப்பு சம்பாதித்து கொண்டார் என்றே சொல்லலாம்.

ஹர ஹர மகாதேவகி: சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஹர ஹர மகாதேவகி. கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஹர ஹர மகாதேவகிஎன்னும் விடுதியை சுற்றி நடக்கும் கதை இது. ஏற்கனவே ஹர ஹர மகாதேவகி என்னும் பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒன்று அடல்ட் காமெடி நிறைந்ததாக ஒலிபரப்பாகி கொண்டிருந்தது. அந்த தாக்கத்தில் இந்த படத்திற்கு அந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டது. இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் நிறைந்த இந்த படம் வெற்றிபெறவில்லை.

Trending News