புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இயற்கை குறைபாடுகளை மையப்படுத்தி வெளிவந்த 5 அஜித் படங்கள்.. உடலை குறைத்து பெண்ணாகவே மாறிய வரலாறு

Actor Ajith: அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இவரின் 5 படங்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

வாலி: 1999 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த இப்படம் அஜித் நடிப்பில் சுமார் 270 நாட்கள் திரையில் ஓடி வெற்றியை கண்டது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடம் ஏற்று நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக காது மற்றும் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வில்லனாய் தெறிக்க விட்டிருப்பார்.

Also Read: ஜெயிலர் மிஸ்ஸானாலும் அடுத்து மிஸ் ஆகாது.. விநாயகனை தூக்கி சாப்பிடும் மாஸ் வில்லன்

அமர்க்களம்: 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி, ராதிகா, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தில் திக்கி திக்கி பேசும் அஜித் தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றார். மேலும் இப்படம் வணிக ரீதியாய் வெற்றியை கண்டது.

உயிரோடு உயிராக: 1998ல் வித்தியாசமான கதை அம்சம் கொண்டு அஜித் மேற்கொண்ட இப்படத்தில் மூளையில் ஏற்படும் கட்டியால் அவதி கொண்டு இருக்கும் அஜய் என்னும் கதாபாத்திரத்தில் தன் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். இருப்பினும் இப்படம் போதிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

வில்லன்: 2002ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித், மீனா, கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இரட்டை வேடத்தில் இடம்பெற்ற அஜீத், ஊனமுற்றோராய் விஷ்ணு கதாபாத்திரத்தில் தெறிக்க விட்டிருப்பார். இப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று கமர்சியல் ஹிட் கொடுத்தது.

வரலாறு: 2006ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் அஜித். அதிலும் குறிப்பாக, பெண் வேடம் ஏற்று இவர் ஆடிய தத்ரூபமான நடனம் படத்திற்கு கூடுதல் வெற்றியாய் அமைந்தது. இப்படம் 210 நாட்கள் திரையில் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

Also Read: விஜய்யை மறைமுகமாக டேமேஜ் செய்யும் நெல்சன்.. சகுனியாக அடுத்தடுத்து படங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி

Trending News