ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நடிப்பதை விட அதிகமாக சம்பாதிக்கும் 5 ஆர்டிஸ்ட்கள்.. பிரபலங்களை கழுவி கழுவி ஊத்தி சொகுசு காணும் பயில்வான்

5 Artists Earn Money More than acting: தற்போது சோசியல் மீடியா அனைவரது கையிலும் இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு விஷயங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் லாபம் சம்பாதிக்கும் விதமாக பலரும் யூட்யூபில் வீடியோக்களை போட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருமானத்தை ஈட்டி கொள்கிறார்கள். இதுதான் தற்போது மிகப்பெரிய ட்ரெண்டிங் ஆக மாறிவிட்டது. அந்த வகையில் சில ஆர்டிஸ்ட்களும் நடிப்பதை தாண்டி யூடியூபில் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சகிலா: ஒரு காலத்தில் ஷகிலா ஏதாவது படங்களில் நடிக்கிறார் என்று தெரிந்து விட்டாலே அந்த படம் மக்களிடம் பிரபலமாகிவிடும். அந்த அளவிற்கு இவருக்கு மவுசு இருந்தது. அதன்பின் போகப்போக வாய்ப்புகள் இல்லாததால் நடிப்பதை விட்டு விட்டார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி மூலம் மறுபடியும் எண்டரி கொடுத்தார். தற்போது யூடியூபில் மிக முக்கியமான பிரபலங்களை பேட்டி எடுத்து அவர்களிடம் சில தனிப்பட்ட கேள்விகளையும் கேட்டு அதை பப்ளிசீட் பண்ணி வருகிறார்.

கிரண்: ஜெமினி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கிரண் தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோயினாக வந்தார். அதன் பின் இவருடைய மார்க்கெட் குறைந்ததால் ஒரு சில பாடல்களில் கவர்ச்சி நடிகையாக வந்தார். அடுத்து இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு பிசினஸில் கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார். இன்னொரு பக்கம் இவருடைய சொந்த வெப்சைட்டில் கிளாமர் புகைப்படங்களை போட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்.

Also read: குடி ஜாஸ்தியாகி வாய்ப்பில்லாமல் திண்டாடி வரும் 5 ஹீரோயின்.. கிளாமர் தூக்கலான கிரண்

பயில்வான் ரங்கநாதன்: ஆரம்பத்தில் சில படங்களில் ஒரு சில சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். தற்போது சமூக வலைதளங்களில் பிரபலங்களை பற்றி பேசி அவர்களின் பர்சனல் வாழ்க்கையும், தனிப்பட்ட விஷயங்களையும் பற்றி தாறுமாறாக பேசி அதன் மூலம் பப்ளிசிட்டி ஆகிவிட்டார். தற்போது இந்த பிசினஸ் நல்லா இருக்கிறது என்று இதுவே இவருடைய வேலையாக செய்து கொண்டு வருகிறார்.

பப்லு: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோவாகி ஒரு சில படங்களில் பரிச்சயமானார். அதன் பின் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இதனை தொடர்ந்து இவர் இளம் பெண்ணை காதலித்து அவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அப்பொழுது இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி வீடியோக்களை போஸ்ட் பண்ணி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க ஆரம்பித்து விட்டார். இதன் மூலமாக தற்போது மிகவும் பிரபலமாகி இதில் நல்ல வருமானம் பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

காமெடி டைம் அர்ச்சனா: சன் டிவியில் காமெடி டைம் என்கிற பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் பரிச்சயமானவர் தான் அர்ச்சனா. அதன்பின் ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகி விட்டார். இந்த பிரபலத்துடன் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் சேர்த்து வைத்த மொத்த பெயரையும் கெடுக்கும் அளவிற்கு ரொம்பவே இவருடைய பெயர் அடி வாங்கிவிட்டது. அடுத்து ஜீ தமிழிலும் போகாதபடி இவருடைய நிலைமை மோசமாகிவிட்டது. இதனை அடுத்து எந்த சேனலுமே வேண்டாம் என்று யூட்யூபில் மூலம் வீடியோக்களை போட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.

Also read: பப்லு, ஹீரோ வில்லத்தனத்தை காட்டிய 5 படங்கள்.. அஜித்தை ஏமாற்றி சிம்ரனை அலறவிட்ட பிருத்வி

Trending News