திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரொமான்ஸில் கமலை மிஞ்சிய 5 ஆர்டிஸ்ட்கள்.. இதயத்தில் காதலை சுமந்த முரளி ராம்கி

80s Romance Heroes: என்னதான் தற்போது காதல் ரொமான்ஸ் என்று பல படங்களில் காட்டினாலும், எப்போதுமே காதல் என்றால் அது 80களில் உள்ள படங்களில் தான் உணர்வுபூர்வமாக இருக்கும். அந்த வகையில் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வதில் சகலகலா வல்லவராக இருந்த கமலை மிஞ்சும் அளவிற்கு சில நடிகர்கள் ரொமான்ஸ் பண்ணி இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மோகன்: இவர் மைக் பிடித்து பாட ஆரம்பித்தால் கண்ணிமைக்காமல் இவரை பார்த்து கொண்டே இருந்த காலம்தான் 80ஸ். அதுவும் காதலியிடம் ப்ரொபோஸ் பண்ணும் போது இவருடைய கண்ணில் இருக்கும் அந்த காந்தப் பார்வையும், பேசும் தன்மையும் அப்ப இருந்த இளசுகளின் மனதை கொள்ளை அடித்தது. அது மட்டுமில்லாமல் பல ஹீரோயின்களும் இவரை சைட் அடித்த காலம் இருந்திருக்கிறது. அந்த அளவிற்கு இவரிடம் கவர்ந்த ஒரு விஷயம் ரொமான்ஸ்.

ராம்கி: இவர் பெயரை சொன்னாலே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது செந்தூரப்பூவே படத்தில் இவர் நடித்த கேரக்டர் தான். இவர் அந்த காலத்தில் முக்கால்வாசி தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் காதல் ஹீரோவாக தான். அதில் மறக்க முடியாத படங்கள் சின்ன பூவே மெல்ல பேசு, இணைந்த கைகள், கருப்பு ரோஜா போன்ற லிஸ்ட்கள் ஏகப்பட்டது இருக்கிறது. முக்கியமாக ஹீரோயின்களிடம் கொஞ்சிக் கொஞ்சி பேசும் அந்த ரொமான்ஸ் தான் இவருக்கு மிகப்பெரிய ஹைலைட்.

Also read: மைக் மோகன் போல் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்.. மார்க்கெட்டை உடைக்க நடக்கும் சதி

முரளி: எத்தனையோ நடிகர்கள் அந்த காலத்தில் போட்டி போட்டு நடித்திருந்தாலும், இவருடைய கண்ணில் தெரியும் காதலையும், இதயத்தில் சுமந்த வலியையும் மறக்கவே முடியாத அளவிற்கு எதார்த்தமான நடிப்பை கொடுத்திருப்பார். ஆனால் அப்படிப்பட்ட இவர் நடித்த படங்களில் முக்கால்வாசி காதலில் தோற்றுப் போய் சோகத்துடனே திரியும் அளவிற்கு கதாபாத்திரம் அமர்ந்திருக்கும். அதில் என்றைக்குமே மறக்க முடியாத அளவிற்கு இப்பொழுது வரை நின்னு பேசக்கூடிய படங்களில் ஒன்றுதான் இதயம்.

திலீப்: இவர் வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தில் கமலின் நண்பராக சினிமாவிற்கு அறிமுகனார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவரிடம் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இவருடைய புன்னகை தான். அப்படிப்பட்ட இவர் முக்கால்வாசி விசுவின் படங்களில் ஹீரோவாக இவரைத்தான் பார்க்க முடியும். அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்தவர்.

சுதாகர்: இவர் தெலுங்கு படங்களில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த பின்பு தமிழில் என்டரி கொடுத்தார். அப்படி வந்தவருக்கு அங்கீகாரமாக கிடைத்த படம் தான் கிழக்கே போகும் ரயில். அந்த காலத்தில் உள்ள வாலிபர்களுக்கு இந்த படம் தான் ஒரு பொக்கிஷமாக அமைந்த வரப்பிரசாதம். ஏனென்றால் இந்த படத்தில் காட்டப்பட்டிருந்த காதல் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் அனைத்துமே இளைஞர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் பூத்துக் குலுங்கியது.

Also read: கமலிடம் இருந்து வாய்ப்பை தட்டிப் பறித்த மைக் மோகன்.. உஷாராக பல படங்களில் வெற்றியை கொடுத்த நடிகர்

Trending News