வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

காதலில் மூழ்கடித்த பிரசாந்தின் 5 படங்கள்.. நட்பிற்காக காதலையே தியாகம் செய்த சாக்லேட் பாய்

90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் ரசிகைகள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். அதிலும் பெரும்பாலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிக அளவில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அப்படியாக தனது நடிப்பின் மூலம்  அனைவரையும் காதலில் மூழ்கடித்த பிரசாந்தின் 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

ஜோடி: பிரவீன் காந்த் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜோடி. இதில் பிரசாந்த் உடன் சிம்ரன், விஜயகுமார், நாசர், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் இவர்கள் இருவரும் தனது காதலில் உறுதியாக இருந்து எவ்வாறு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. 

Also Read: நடிக்காமலேயே 5 தலைமுறைக்கு சேர்த்து வைத்த பிரசாந்த்.. வியக்க வைக்கும் சொத்து விவரம்

கண்ணெதிரே தோன்றினாள்: இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்ணெதிரே தோன்றினாள். இதில் பிரசாந்த் உடன் சிம்ரன், கரண், விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் நட்பிற்கும் காதலுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான அனுபவத்தை மிக அழகாக காட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நட்பிற்காக தன் காதலையே தியாகம் செய்யும் அளவிற்கு தனது நடிப்பின் மூலம் பிச்சு உதறி இருப்பார் பிரசாந்த். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

ஜீன்ஸ்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில்1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜீன்ஸ். இதில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். மேலும் பிரசாந்த் உடன் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் இப்படத்தில் இவர்களுக்குள் நடக்கும் காதல் காட்சிகள் ஆனது இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கூட வெகுவாகவே கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இப்படம் இளசுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படமாகவே அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்ததோடு ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. 

Also Read: அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் முன்னணி நடிகையாக வளர முடியாது.. 40 வருடங்களாக குமுறும் பிரசாந்த் பட ஆன்ட்டி நடிகை

ஆசையில் ஒரு கடிதம்: செல்வா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆசையில் ஒரு கடிதம். இதில் பிரசாந்த் உடன் கௌசல்யா, ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ஒரு பெண்ணை சந்தித்த முதல் பார்வையிலேயே காதலில் விழும் பிரசாந்த், தனது நண்பனின் மனைவியாக போகிறவர் என்று தெரியாமல் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக வைத்து படமானது அமைந்துள்ளது.

பிரியாத வரம் வேண்டும்: கமல் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரியாத வரம் வேண்டும். இதில் பிரசாந்த் உடன் ஷாலினி, மனோரமா, ஜனகராஜ், மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் இவர்களுக்கிடையே காதல் பூவானது மலர தொடங்குகிறது. இதனை எவ்வாறு ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த படமானதாக அமைந்துள்ளது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. 

Also Read: பிரசாந்த்துடன் நேருக்கு நேர் மோதி படுதோல்வி சந்தித்த விஜய்யின் 3 படங்கள்.. 90-களில் திணறிய தளபதி

Trending News