Singam Puli: பொதுவாக ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு குணச்சித்திர கதாபாத்திரங்களை செய்பவர்களும் முக்கியம்.
என்ன தான் ஹீரோ மாஸ் காட்டினாலும், ஹீரோயின் அழகால் மிரட்டினாலும் படத்தை தாங்கிப் பிடிக்க தரமான குணச்சித்திர கதாபாத்திரங்கள் வேண்டும்.
அப்படி 2024 இல் வெளியான படங்களில் மக்கள் மனதில் நின்ற 5 குணச்சித்திர கதாபாத்திரங்களை பற்றி பார்க்கலாம்.
சேத்தன்: ஜமா படத்தில் நடிகர் சேத்தன் தாண்டவம் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். தன்னுடைய நாடகக் குழுவை வளர்க்க ஹீரோ கல்யாணத்தை ஊக்குவிக்கும் தருணம்.
அதே நேரத்தில் தன்னுடைய மகளை காதலிக்கிறார் என்ற தெரிந்ததும் வில்லனாக மாறும் தருணம்.
கடைசியில் கல்யாணத்தின் நாடகக் கலை திறமையை கண்டு அவனுடைய காலில் விழும் தருணமாகட்டும் சேத்தன் தாண்டவமாக வாழ்ந்திருப்பார்.
கென் கருணாஸ்: நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாசுக்கு இந்த வருடம் ஜாக்பாட் ஆக அமைந்தது தான் விடுதலை 2.
அமரன், வார்த்தை படங்களை போலவே இந்த படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
மிரள வைத்த சிங்கம்புலி!
சிங்கம் புலி: நடிகர் சிங்கம் புலி இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க தெரிந்தவரா என ஆச்சரியப்படுத்தியது மகாராஜா படம்.
அதிலும் விஜய் சேதுபதி தன்னை கண்டுபிடிக்கும் கேரக்டரில் வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார்.
மாறன்: விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் மாறன். மாறனுக்கு நடிகர் சந்தானம் தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தார்.
இதைத் தாண்டி மாறன் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஜெ பேபி படத்தில் நடித்திருந்தார். ஊர்வசியின் மூத்த மகன் கேரக்டர் இவருக்கு.
தம்பியின் மீதான ஈகோ பொய் கோபமாக அவரிடம் இருக்கும். ஒரு கட்டத்தில் தம்பியை புரிந்து கொண்டு அவர் எதார்த்தமாக தம்பியிடம் பேசும் காட்சி ரொம்பவும் அருமை.
காளி வெங்கட்: நடிகர் காளி வெங்கட் சமீப காலமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைக்களங்கள் அவரை சினிமா களத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.
அப்படி இந்த வருடம் அவர் தேர்ந்தெடுத்து நடித்த கதைதான் லப்பர் பந்து. ஒன்றும் தெரியாத அப்பாவியான கிரிக்கெட் அணியின் தலைவன்.
அதே நேரத்தில் இன்னொரு கிரிக்கெட் அணியை உருவாக்கி அதில் அன்பு வைத்து ஹீரோவாகும் காட்சிகள் எல்லாம் வேற லெவல்.