திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் ஒரு கை பார்த்த மம்மூட்டியின் 5 படங்கள்.. சூர்யாவால் தேவாவுக்கு கிடைத்த மாஸ்

Actor Mammootty Tamil Movies : மலையாள சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் மம்முட்டி தமிழ் சினிமாவையும் ஒரு கை பார்த்திருக்கிறார். இவரை மலையாள நடிகர் என்று தமிழ் ரசிகர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை, அந்த அளவிற்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் தன்னுடைய பங்களிப்பை அளித்து கொண்டிருக்கிறார். அப்படி மம்முட்டி தமிழில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஐந்து படங்களை பற்றி பார்ப்போம்.

மறுமலர்ச்சி: மலையாள நடிகரான மம்முட்டி மறுமலர்ச்சி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார். இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக தேவயானி நடித்தார்  இந்த படத்தில் தேவயானி, மம்மூட்டி இடையே மோதல் ஏற்பட்டு கடைசி திருமணத்தில் முடிந்தது. இந்த படத்தில், அன்பினால் மட்டுமே இந்த உலகை வெல்ல முடியும் என்ற நல்ல கருத்தையும்  மம்முட்டி உணர்த்தியதால் தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாகவும் மாறினார்.

ஆனந்தம்: தமிழ் சினிமாவில் எத்தனையோ கூட்டுக் குடும்ப கதைகளை கொண்ட படங்கள் வெளி வந்தாலும் மம்முட்டி நடிப்பில் வெளியான ஆனந்தம் படத்தை இன்று பார்த்தால் கூட மனம் அவ்வளவு மகிழ்ச்சி அடையும். இதில் மூத்த அண்ணனான மம்முட்டி தன்னுடைய மூன்று தம்பிகளுக்காகவே வாழக்கூடிய அண்ணனாக நடித்தார். இதில் இவருடன் முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா உள்ளிட்ட பல  பிரபலங்கள் இணைந்து நடித்தனர்.

Also Read: நட்புக்காக ஓடி வெற்றி கண்ட 6 படங்கள்.. இரண்டு தலைமுறையாக பேசப்படும் தேவா, சூர்யாவின் நட்பு

தளபதி: மணிரத்தினம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த படம் தான் தளபதி. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடித்தனர். இவர்களுடன் அரவிந்த்சாமி, ஷோபனா உள்ளிட்டோரும் நடித்தனர். இதில் சூர்யாவாக ரஜினியும், தேவாவாக மம்முட்டியும் இணை பிரியாத நண்பர்களாக படம் முழுக்க பயணித்தனர்.

இந்த படத்தின் மூலம் சூர்யாவால் தேவாவிற்கு தமிழ் ரசிகர்களிடையே  மாஸ் நடிகர் என்ற பெயரும் கிடைத்தது. ஏனென்றால் படத்தில் தேவாவிற்காக சூர்யா தன்னையே அர்ப்பணித்தார். இந்த இரண்டு ஜாம்பவான்களும் ஒருவர் மற்றவரை விட்டுக் கொடுக்காமல் மிகச் சிறப்பாக இந்த படத்தில் நடித்தனர்.

Also Read: மறைந்த இயக்குனர் சித்திக் சூப்பர் ஹிட் அடித்த ஆறு படங்கள்.. 400 நாட்கள் ஓடிய கனகாவின் மறக்க முடியாத படம்

கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்: ஆர்மி ஆபீஸராக இருந்து தன்னுடைய ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி ஆன கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்த படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்தார். இந்த ஜோடி திரையில் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

படத்தில் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பது போல் காட்டினாலும் இவர்களுக்கிடையே இருக்கும் செல்லச் சண்டை செம க்யூட் ஆக இருக்கும். இவர்களுடன் இந்த படத்தில் அஜித், தபு, அப்பாஸ் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்தனர். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

Also Read: எல்லா பெரும் தலைகளுடன் நடித்த அப்பாஸ்.. 5 படங்களிலும் ஆடியன்சை அள்ளிய சாக்லேட் பாய்

பேரன்பு: ராம் எழுதி இயக்கிய பேரன்பு படத்தில் மம்முட்டி, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.  இந்தப் படத்தில் ஒரு தந்தை மற்றும்  மகள் இடையே இருக்கும் பாசப் போராட்டத்தை அழகாக காட்டினர். இதில் ஒரு தந்தையாக  அமுதவன் என்ற கேரக்டரில்  மம்முட்டி தனது சிறப்பான நடிப்பை வெளிகாட்டி பலரையும் உருக வைத்தார்.

Trending News