புதன்கிழமை, ஜனவரி 22, 2025

முரட்டுத்தனமான சண்டை இல்லாமல் ராஜ்கிரண் நடித்த 5 பெஸ்ட் படங்கள்.. சென்டிமென்டில் அழ வைத்த பாண்டவர் பூமி

Actor Rajkiran: பொதுவாய், சண்டைக் காட்சிகளுக்கு என்று பெயர் பெற்றவர் தான் ராஜ்கிரண். இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில் சண்டை காட்சிகள் இடம் பெறுவது வழக்கம். அவ்வாறு இல்லாமல் தற்பொழுது இவர் சப்போர்ட்டிங் கேரக்டரிலும் சிறப்புற நடித்து வருகிறார்.

இவர் ஏற்கும் கதாபாத்திரம் படத்தில் கூடுதல் சிறப்பை பெற்றிருக்கும். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பார்ப்போரை அழ வைக்கும் அளவுக்கு செண்டிமெண்டில் அசத்தியிருப்பார். அவ்வாறு ராஜ்கிரண், கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக கலக்கிய 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read:  அடங்கி போகாமல் திருப்பி அடித்த மாரி செல்வராஜ்.. கர்ணனுக்கும், மாமன்னனுக்கும் உள்ள ஒற்றுமை

தவமாய் தவமிருந்து: 2005ல் சேரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தவமாய் தவமிருந்து. இப்படத்தில் ராஜ்கிரண், சேரன், சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தந்தை மகனுக்குரிய பிணைப்பையும் மேலும் குடும்ப உறவின் சிறப்பை மேம்படுத்தியும் கதை அமைக்கப்பட்டு இருக்கும். இப்படத்தில் பொறுப்பான தந்தையாய் சிறப்புற நடித்திருப்பார் ராஜ்கிரண்.

மஞ்சப்பை: 2014ல் என் ராகவன் இயக்கத்தில் காமெடி படமாய் வெளிவந்த இப்படத்தில் ராஜ்கிரண், லட்சுமி மேனன், விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சராசரி கிராமத்து வாழ்க்கையை மேம்படுத்தி கதை அமைக்கப்பட்டு இருக்கும். இப்படத்தில் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் ராஜ்கிரண். இருப்பினும் இப்படம் பெரிதளவு பேசப்படவில்லை.

Also Read:  கடைசி படத்தால் நொந்து நூடுல்ஸ் ஆன விஜய்.. இழுபறியில் தளபதி 68 படப்பிடிப்பு

பாண்டவர் பூமி: சேரன் இயக்கத்தில் மாபெரும் ஹிட் கொடுத்த படம் தான் பாண்டவர் பூமி. குடும்ப கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் பாசமிகுந்த அண்ணனாய் இப்படத்தில் ராஜ்கிரண் நடித்து கூடுதல் சிறப்பை பெற்று இருப்பார். ராஜ்கிரண் கேரக்டர் பெஸ்ட் மூவிஸில் இதுவும் ஒன்று.

கிரீடம்: 2007ல் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கிரீடம் இப்படத்தில் அஜித் குமார், திரிஷா, ராஜ்கிரண், சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பொறுப்பான தந்தையாய் தன் மகனின் வளர்ச்சியை மேம்படுத்தும் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் சிறப்புற நடித்திருப்பார். இவை மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பேர் சொல்லும் படமாக அமைந்தது.

Also Read:  அந்த ஆளுக்கு கூட நடிக்க முடியாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறிய சில்க்.. கெஞ்சி கூத்தாடிய இயக்குனர்

ரஜினி முருகன்: 2016ல் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் முதியவராய் இடம்பெறும் ராஜ்கிரணின் செல்லப் பேரனாய் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். மேலும் தன் சொந்த பந்தங்களை காண இவர் மேற்கொள்ளும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார்.

Trending News