வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

மீண்டும் பார்க்கத் தூண்டும் சுந்தர் சி-யின் 5 சிறந்த படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரசாந்த் வடிவேலு காம்போ

தமிழ் சினிமாவிற்கு கமர்சியல் படங்களை கொடுத்ததன் மூலம் எல்லாவிதமான ரசிகர்களையும் கவர்வதில் சுந்தர் சி-க்கு நிகர் வேறு எவரும் இல்லை. அப்படி இவரது இயக்கத்தில் வெளியான 5 சிறந்த படங்கள் ரசிகர்களை இப்போதும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. அதிலும் பிரசாந்த் வடிவேலுவின் அல்டிமேட் காம்போவில் வெளியான வின்னர் திரைப்படம் எப்போதும் ரசிகர்களின் பிடித்தமான படங்களின் லிஸ்டில் உள்ளது.

உள்ளத்தை அள்ளித்தா: 1996 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் தமிழில் ஒரு சிறந்த நகைச்சுவை திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்துள்ளார். இப்படத்தில் கார்த்தி உடன் ரம்பா, கவுண்டமணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் கார்த்திக் கவுண்டமணியின் லூட்டி ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

Also Read: 16 வருடமாக காக்க வைத்த சுந்தர் சி.. சைலண்டா பார்த்த வேலை

முறைமாமன்: இசையமைப்பாளர் வித்யாசாகர் இசைஅமைப்பில் உருவான இத்திரைப்படம் 1995ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான சிறந்த நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜெயராம், குஷ்பூ, கவுண்டமணி, மனோரமா மற்றும் வினுசக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முறைமாமன் படத்தில் ஜெயராம் மற்றும் கவுண்டமணியின் அட்ராசிட்டி படம் முழுவதும் நகைச்சுவை உணர்வை காட்டியுள்ளது. சுந்தர் சி இந்த படத்தில் கொடுத்த வாய்ப்பின் மூலம் தான் மலையாள நடிகரான ஜெயராம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார்.

வின்னர்: 2003இல் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் பிரசாந்துடன், கிரண், வடிவேலு, விஜயகுமார் மற்றும் எம்என் நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வின்னர் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் வடிவேலுவின் காமெடி அனைவராலும் ரசிக்கக் கூடியதாக இன்றளவும் மக்கள் மத்தியில் மீம்ஸ் வடிவில் நீடித்திருக்கிறது.

Also Read: பிரம்மாண்டமான வரலாற்று படத்தை எடுக்கப்போகும் சுந்தர் சி.. வலையில் விழுந்த 2 திமிங்கலங்கள்

தலைநகரம்: 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தலைநகரம் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான திரைப்படமாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசை அமைத்துள்ளார். இதில் சுந்தர் சியுடன் வடிவேலு மற்றும் ஜோதிமயி ஆகியோர் நடித்துள்ளனர். தலைநகரம் படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. வியாபார ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

கலகலப்பு: 2012 ஆம் ஆண்டு வெளிவந்த கலகலப்பு சுந்தர் சி இயக்கிய ஒரு சிறந்த நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் விமலுடன் சிவா, அஞ்சலி, ஓவியா மற்றும்  பலர் நடித்துள்ளனர். இது சுந்தர் சி-யின் 25 ஆவது திரைப்படம். இதன் வெற்றியை தொடர்ந்து கலகலப்பு பாகம்-2 வெளிவந்து  மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: சுந்தர் சி-க்கு ஆட்டம் காட்டும் இளம் இயக்குனர்.. 6 மடங்கு அதிகமான வசூலால் ஷாக்கான திரையுலகம்

இவ்வாறு இந்த 5 படங்களும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றிபெற்ற படங்களாகும். அதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வின்னர் படத்தில் வடிவேலு பிரசாந்துடன் செய்திருக்கும் அல்டிமேட் காமெடி இன்றும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

- Advertisement -spot_img

Trending News