திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ராட்சசன் ஆக வந்த 5 பெஸ்ட் சைக்கோ கேரக்டர்கள்.. ஹீரோவை மறந்து கொடூரமாக நடித்த தனுஷ்

சினிமாவில் எவ்வளவோ படங்கள் வித்தியாசமான முறையில் வந்திருந்தாலும் சில படங்கள் குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான படங்களும் வெளிவந்திருக்கிறது. அதிலும் சமீபத்தில் சைக்கோவாக நடித்து மிக கொடூரமான முறையில் வந்த ஐந்து கேரக்டர்களும் அது என்ன படங்கள் என்றும் பார்க்கலாம்.

ராட்சசன்- கிறிஸ்டோபர்: ராம்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ராட்சசன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் தொடர்ச்சியாக கொலை செய்யும் கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் கதை எடுக்கப்பட்டிருக்கும். இதில் ரொம்பவே கொடூரமான கேரக்டரில் கிறிஸ்டோபர் என்பவர் நடித்திருக்கிறார். இதில் இவர் பல அவமானங்களை சந்தித்ததால் அதற்கு காரணமான விஷயத்திற்கு பழிவாங்கும் நோக்கில் சைக்கோவாக மாறி ஒவ்வொருவரையும் கொலை செய்வார். இந்த கேரக்டரை பார்ப்பதற்கு நிஜமாகவே பயங்கரமாக இருக்கும்.

Also read: வெற்றி படத்தினால் ஒரேடியாக சம்பளத்தை ஏற்றிய 5 நடிகர்கள்.. உச்சாணி கொம்புக்கு போன SJ சூர்யா

இமைக்கா நொடிகள்- அனுராக் கஷ்யப்: ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் திரைப்படம் வெளிவந்தது. இதில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா விஜய் சேதுபதி மற்றும் அனுராக் கஷ்யப் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் புத்திசாலித்தனமான சிபிஐ அதிகாரியால் ஒரு தொடர்கொலையாளி எப்படி பிடிக்கப்படுகிறார் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இதில் அனுராக்ஷ்யப் தமிழில் நடிக்கும் முதல் திரைப்படம். நடித்த முதல் படத்திலிருந்து நெகட்டிவ் கேரக்டரில் நடித்து நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கிற அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இவரைப் பார்ப்பதற்கு உண்மையான வில்லன் மாதிரி தான் இவருடைய முகத்தோற்றம் இருக்கும்.

ஸ்பைடர்- எஸ் ஜே சூர்யா: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு ஸ்பைடர் திரைப்படம் வெளிவந்தது. இதில் மகேஷ் பாபு, எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பரத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா ஒரு சைக்கோவாக அனைவரையும் கொள்ளத் துடிக்கும் கேரக்டரில் நடித்தார். இதில் இவரோட தம்பியாக பரத் அவரும் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா வின் நடிப்புக்கு பல விமர்சனங்களை பெற்று பாராட்டு கிடைத்தது.

Also read: கண்ணை நம்பாதே உதயநிதிக்கு வெற்றியா, தோல்வியா.? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

நானே வருவேன்-தனுஷ்: செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் தம்பியான கேரக்டரில் சைக்கோவாக நடித்திருக்கிறார். இதுவரை ஹீரோவாக நடித்த தனுஷ், ஹீரோ என்பதே மறந்து மிகவும் கொடூரமான கேரக்டரில் நடித்தார். ஆனால் இவருடைய நடிப்புக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து இப்படம் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டானது.

சைக்கோ- வில்லன்: மிஸ்கின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு சைக்கோ திரைப்படம் வெளிவந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சைக்கோ கில்லர் கேரக்டரில் அங்குலிமாலாவாக ராஜ்குமார் பிச்சுமணி நடித்தார். இதுதான் இவர் நடித்த முதல் படம். இதில் ஒவ்வொரு பெண்களையும் கடத்தி அவர்களை கொடூரமான முறையில் உயிரை எடுக்கும் ராட்சசன் ஆக நடித்திருக்கிறார்.

Also read: அடேங்கப்பா இந்த பாட்டு எல்லாம் தனுஷ் தான் எழுதுனாரா.. அதிக ஹிட்டான 5 பாடல்கள்

Trending News