புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திருட்டை மையமாக வைத்து ஹிட்டடித்த 5 படங்கள்.. எதார்த்தமான நடிப்பில் தெறிக்கவிட்ட சதுரங்கவேட்டை

தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் படங்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சீட்டிங் மற்றும் கொள்ளையடிப்பதை மையமாக வைத்து எடுத்த படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொழுது அஜித் நடித்துக்கொண்டிருக்கும் துணிவு படம் கூட வங்கிக் கொள்ளையை அடிப்படையான கதையம்சம் கொண்டது தானாம்.

நாணயம்: 2010 ஆம் ஆண்டு சக்தி சிதம்பரம் தயாரிப்பில் வெளிவந்த படம் நாணயம். இந்த படம் முழுக்க முழுக்க வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுத்த திரில்லர் படமாகும், பிரசன்னா, சிபிராஜ், எஸ்பிபி போன்றவர்களுக்கு இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

Also Read: சினேகா-பிரசன்னா விவாகரத்தா.? உண்மையைப் புட்டுப் புட்டு வைக்கும் பயில்வான்

திருடா திருடா: 1993ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவானது  திருடா திருடா. சீட்டிங் மற்றும் ராபரி சம்பந்தமான கதைகளை தமிழ் சினிமாவ கற்றுக் கொடுத்ததே இந்தப் படம் என்று கூட சொல்லலாம். ஏ ஆர் ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.

மங்காத்தா: அஜித் மற்றும் அர்ஜுன் இருவரும் அன்டி ஹீரோவாக நடித்த படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. வெங்கட் பிரபு இந்த படத்தை சஸ்பென்ஸ், த்ரில்லராக உருவாக்கி அசத்திவிட்டார்.

Also Read: அதிரிபுதிரியாக ரெடியாகும் மங்காத்தா பார்ட்-2.. அஜித்துடன் சர்ப்ரைஸ் புகைப்படம் வெளியிட்ட ஆக்ஷன் கிங்

சதுரங்க வேட்டை: உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் சதுரங்க வேட்டை. ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படியெல்லாம் ஏமாற்றி சீட்டிங் செய்வதை தொழிலாக வைத்திருப்பார் நட்ராஜ். இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

வலிமை: எச் வினோத் இயக்கத்தில் இந்த வருடம் அஜித் நடிப்பில் உருவான வலிமை படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக ரசிகர்களை கவர்ந்தது. ஐ பி எஸ் ஆபிஸர் ஆக அஜித் இந்தப்படத்தில் நடிப்பில் அசத்தி இருப்பார். கிட்டத்தட்ட 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது வலிமை  திரைப்படம் .

Also Read: தோல்வி பயத்தை மறைமுகமாக காட்டிய வலிமை, கோப்ரா.. வெற்றிக்காக கௌதம் மேனன் போட்ட பிளான்

Trending News