
ஐபிஎல் 18 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. ஆச்சரியப்படும் அளவிற்கு பல வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டு வீரர்களும் இதில் விலை போகாமல் இருக்கின்றனர். ஆரம்ப விலையாக 2 கோடிகள் நிர்ணயித்தும் சில வீரர்களை எந்த ஒரு அணியும் எடுக்கவில்லை என்பது தான் பெரிய சோகக் கதை.
டேவிட் வார்னர்: ஐபிஎல் கிங் என பாராட்டுக்களை பெற்ற டேவிட் வார்னரை இந்த சீசனில் எந்த ஒரு அணியும் எடுக்காதது தான் பெரிய ஆச்சரியமாக உள்ளது .டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர் இவர். 2022ஆம் ஆண்டு டெல்லி இவரை6.25 கோடிகள் கொடுத்து வாங்கியது.
கேன் வில்லியம்சன்: நம்ம அணியில் ராகுல் டிராவிட் போல் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன். ஆரம்பத்திலிருந்து, இப்பொழுது வரை 20 ஓவர் போட்டிகளில் இவரால் அதிரடி காட்ட முடியுமா என கேள்விக்குறியில் தான் இருக்கிறார்.
டேரில் மிட்சல்: நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் கோப்பையில் கூட தன்னை நிரூபித்து காட்டியபோதிலும் எந்த அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை.
ஜானி பேர்ஸ்டவ்: சமீப காலமாக இவரது செயல்பாடுகள் நன்றாக இல்லை என்று இங்கிலாந்து அணி இவரை எடுப்பதில்லை அதனால் இவரது நிலைமை இந்த ஐபிஎல்லில் மிகவும் மோசமாக இருக்கிறது. எந்த அணியும் இவர் பக்கம் திரும்பவில்லை.
ஷர்துல் லார்ட் தாகூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்தவர் தாகூர். ஆல் ரவுண்டரான இவர் 4 வருடங்கள்அந்த அணிக்காக விளையாடிய போதிலும் இப்பொழுது எந்த ஒரு அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை. தோனி கைவிட்டதற்குப் பின் இவர் கதை மோசமாக உள்ளது. இவரை செல்லமாக லார்ட் என்றுதான் அழைப்பார்கள்.