வெள்ளிக்கிழமை, நவம்பர் 29, 2024

2024-ல் திகில் கதையாக வெளிவந்த 5 பாலிவுட் படங்கள்.. விடாத கருப்பு போல் ஜான்வியை ஆட்டிப்படைத்த சைத்தான்

Horror Movie: இந்த ஆண்டு வெளிவந்த பாலிவுட் படங்களில் இந்த ஐந்து படங்களுமே திகில் படமாகவும் வசூல் அளவில் பெருத்த லாபத்தை சம்பாதித்த படமாகவும் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த படங்களை பற்றி தற்போது ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

Bhool Bhulaiyaa 3: அனீஸ் பஸ்மீ இயக்கத்தில் கார்த்திக் ஆரியன், வித்யா பாலன் மற்றும் மாதிரி தீட்சித் நடிப்பில் காமெடி கலந்த ஹாரர் படமாக பூல் புலையா 3, நவம்பர் மாதத்தில் வெளியானது. 200 ஆண்டுகளுக்கு முன் ரக்த் காத் சாம்ராஜ்யத்தில் பெண்ணொருவருக்கு மன்னர் மரண தண்டனை அளித்திருக்கிறார். அங்கே இறந்த பெண் ஆவியாக வந்து பழிவாங்கும்.

இதனால் பேய்களை விரட்டுவதாக பொய் சொல்லி சம்பாதிக்கும் ரூ பாபா எனும் ருஹான், ஹீரோயின் மூலம் ரக்த் காத் கிராமத்திற்கு செல்லும் சூழல் ஏற்படுகிறது. அங்கு அரண்மனையில் அடைக்கப்பட்டிருக்கும் மஞ்சுலிகா ஆவியை ருஹான் விரட்ட வேண்டும். ஆனால் ஆவி அடைக்கப்பட்ட கதவின் பூட்டு ஏற்கனவே திறக்கப்பட்டது ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அரண்மனையில் நடக்கும் அமானுஷ்யங்களுக்கு காரணம் என்ன? ருஹான் வந்த வேலையை முடித்தாரா? என்பதுதான் இப்படத்தின் கதையாக இருக்கும்.

Munjya: ஆதித்யா சர்போத்தர் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முன்ஜியா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் கோத்யா என்ற சிறுவன் தன்னை விட ஏழு வயது மூத்த பெண்ணான முன்னி-யை காதலிக்கிறான். முன்னி-யின் திருமணம் வேறொருவருடன் நிச்சயிக்கப்பட்டபோது, ​​கோத்யா அவருக்கு விஷம் கொடுக்க முயன்று தோல்வியடைந்தார்.

அவரது தாயால் பூசாரி ஆக்கப்பட்ட பிறகு, கோத்யா, முன்னி-யை திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்து, தனது சகோதரி கீதாவை ஒரு பீப்பல் மரத்தின் கீழ் சூனியம் செய்வதற்காக சேதுக்வாடி என்ற அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் செல்கிறார் . இந்த செயல்பாட்டில், அவர் தனது சகோதரியை பலி கொடுக்க முயன்றபோது தற்செயலாக தன்னைக் கொன்றுவிடுகிறார். மேலும் மரத்தை வேட்டையாடும் முன்ஜியா என்ற தீய ஆவியாக மாறுகிறார். இப்படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 130 வசூலை அடைந்து பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது.

Article 370: ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் யாமி கௌதம், பிரியாமணி நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆர்டிகள் 370 திரைப்படம் வெளிவந்தது. இப்படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 110 கோடிக்கு மேல் லாபத்தை கொடுத்திருக்கிறது. அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Stree 2: அமர் கவுஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், சர்தா கபூர் நடிப்பில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஸ்ட்ரீ 2 படம் வெளிவந்தது. இப்படம் 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 870 கோடிக்கு மேல் லாபத்தை வசூலிக்கும் அளவிற்கு உலக அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருக்கிறது. பெண்களை கடத்தி செல்லும் கொடூரமான சர்காதாவை தோற்கடிக்கும் விதமாக இப்படத்தின் கதை நகைச்சுவை கலந்து திகில் திரைப்படமாக அதிர வைத்திருக்கும்.

Shaitaan: விகாஷ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சைத்தான் திரைப்படம் வெளிவந்தது. குடும்பத்துடன் பண்ணை வீட்டுக்கு வரும் கபீர் ரிஷியின் மகள் ஜான்வி வனராஜன் கட்டுப்பாட்டுக்குள் போய்விடுகிறார். அந்த வகையில் விடாமல் தொடர்த்தும் கருப்பாக பண்ணை வீட்டுக்கும் வனராஜன் வருகிறார். இந்த போராட்டத்தில் எப்படி ஜான்வி காப்பாற்றப்படுகிறார் என்பதுதான் விறுவிறுப்பான கதையாக இருக்கும். ஜான்வியை

- Advertisement -spot_img

Trending News