புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என நிரூபித்த 5 சகோதரர்கள்.. டில்லிக்கு டஃப் கொடுத்து வரும் ரோலக்ஸ்

அண்ணனின் சிபாரிசில் நடிக்க வந்த தம்பிகள் என்று தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் சகோதரர்கள் பலர் உள்ளன. இருப்பினும் தன் தனிப்பட்ட முயற்சியால் இவர்கள் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கி உள்ளனர் என்பதே குறிப்பிடத்தக்கது.

தம்பிக்கு உடையான் படைக்கு அஞ்சான் என்னும் பழமொழிக்கு ஏற்ப இவர்கள் தங்களின் முயற்சிக்கு அவர்களே உறுதுணையாக இருந்து வருகின்றனர். அவ்வாறு தமிழ் சினிமாவில் கலக்கி வரும் 5 சகோதரர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: முரட்டுத்தனமாக உடம்பை மெருகேற்றும் சூர்யா.. ட்ரெண்டாகும் ஜிம் ஒர்க் அவுட் புகைப்படம்

மோகன் ராஜா- ஜெயம்ரவி: தன் அண்ணனின் துணையோடு சினிமாவில் களம் இறங்கியவர் தான் ஜெயம் ரவி. 2003ல் இவரின் அண்ணனான ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் படத்தின் மூலம் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் இப்படம் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் நல்ல விமர்சனத்தை பெற்று அதிக வசூலை அள்ளியது. மேலும் மோகன் ராஜா பல படங்களை இயக்கிய பின்பு தற்போது சினிமாவில் இடைவெளி விட்டு காணப்படுகிறார். ஆனால் சமீபத்தில் வெளியான பி எஸ் 2 வில் பொன்னியின் செல்வனாக நடிப்பு மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து வருகிறார் ஜெயம் ரவி.

பிரேம்ஜி-வெங்கட் பிரபு: தமிழ் சினிமாவில் ஒரு பாடகராய், நடிகராய் மற்றும் காமெடியனாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் பிரேம்ஜி. இவரின் நடிப்பில் வந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் அன்பை பெற்றவர். இவரின் மூத்த சகோதரரான வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். மேலும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜிம்மில் தலைகீழாக தொங்கி குறளி வித்தை காட்டும் ஜோதிகாவின் புகைப்படம் .. சூர்யாவுக்கே டப் கொடுப்பாங்க போல

ஜித்தன் ரமேஷ்- ஜீவா: இவர்கள் இருவரும் நடிகர்களாக சினிமா பயணத்தை மேற்கொண்டார்கள். இருப்பினும் தம்பியான ஜீவா நடிப்பில் வெளிவந்த படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஆனால் அண்ணனான ரமேஷுக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததே தவிர நடிக்கும் திறமை இல்லாமல் பட வாய்ப்பினை இழந்து காணப்பட்டார். இதைத்தொடர்ந்து பிக் பாஸில் இடம் பெற்று வாய்ப்பு தேடினார் இருப்பினும் தோல்வியே கிடைத்தது.

செல்வராகவன்-தனுஷ்: இவர்கள் இருவருமே தன் சினிமா பயணத்தில் கொடி கட்டி பறக்கும் பிரபலங்கள். ஆரம்ப காலத்தில் தன் தம்பியான தனுஷை வைத்து படம் இயக்குவதில் ஈடுபட்டார் செல்வராகவன். மேற்கொண்டு படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தனுஷம் இவரின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தன. தற்போது செல்வராகவன் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘கங்குவா’ என்னன்னு தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த சுடச்சுட அப்டேட்டால் மிரளும் திரையுலகம்

சூர்யா-கார்த்தி: தன் தந்தையின் சிபாரிசில் சினிமாவில் கால் பதித்தவர் சூர்யா. அதன் பின் பல படங்களில் நடித்து தற்போது ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க தன் அப்பாவின் முக பாவனை கொண்ட கார்த்தி பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த கைதி படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கார்த்தி. அப்படத்தில் இவர் நடிப்பில் வரும் சண்டைக் காட்சிகளை விட விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ஆக மாஸ் காட்டினார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News