வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

சத்யராஜுக்கு தானாக அமைந்த 5 கேரியர் பெஸ்ட் மூவிஸ்.. ரஜினி கமல் போல் இமேஜ் குறையாத மகா நடிகன்

Actor Sathyaraj: தன் திறமைக்கு வாய்ப்பு கிடைத்து, தமிழ் சினிமாவில் இரு ஜாம்பவான்களாய் வலம் வரும் கமல் மற்றும் ரஜினிக்கு, இணையாக உருவாகிய நடிகர் தான் சத்யராஜ். இவரின் நகைச்சுவை நக்கல் பேச்சின் மூலம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டவர்.

பன்முகத் திறமை கொண்ட இவர் பல கதாபாத்திரங்களை ஏற்று பல படங்களில் வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில் சத்யராஜுக்கு தானாக அமைந்த 5 கேரியர் பெஸ்ட் மூவிஸ் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

Also Read:நக்கல், நையாண்டிக்கு பெயர் போன 5 நடிகர்கள்.. 6 மணிக்கு மேல் மணிவண்ணனுடன் எடுக்கும் அவதாரம்

வேதம் புதிது: 1977ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வேதம் புதிது. இப்படத்தில் சத்யராஜ், சரிதா, அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பிராமண கதாபாத்திரத்தில் இவர் மேற்கொண்ட செயல்களின் மூலம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றார். மேலும் இப்படம் வணிக ரீதியான வெற்றியை பெற்று தந்தது.

அமைதிப்படை: 1994ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அமைதிப்படை. இப்படத்தின் சத்யராஜ், மணிவண்ணன், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அமாவாசை கதாபாத்திரத்தில் சத்யராஜ் அரசியல் வாய்ப்பு ஏற்று அதன் பின் மூர்க்கமாக செய்யும் செயல்களால், மக்களிடையே பெரிதும் பேசப்பட்டார். இப்படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்து, பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது.

Also Read: வாரிசு நடிகைகளுக்குள் நடக்கும் குடுமி பிடி சண்டை.. வாய்ப்பை பிடிக்க செய்யும் மட்டமான வேலை

பாகுபலி: 2015ல் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பாகுபலி. இப்படத்தில் அரசனின் ஆணையை மீறாத அடிமையாய் கட்டப்பா கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் சத்யராஜ். மேலும் இப்படத்தில் இவரின் நடிப்பு மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வால்டர் வெற்றிவேல்: 1993ல் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வால்டர் வெற்றிவேல். இப்படத்தில் சுகன்யா, சத்யராஜ், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், பாசமுள்ள அண்ணனாகவும் நடிப்பில் அசத்திருப்பார் சத்யராஜ். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று, 200 நாட்கள் திரையில் ஓடிய பெருமையை பெற்றது.

Also Read: கேமியோ ரோலில் மாஸ் காட்டிய 5 இயக்குனர்கள்.. சஸ்பென்ஸ் என்ட்ரியில் தெறிக்க விட்ட லோகேஷ்

நடிகன்: 1990ல் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நடிகன். இப்படத்தில் சத்யராஜ், குஷ்பூ, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் மனோரமாவுக்கு இணையாக இவர் போட்ட கெட்டப் மற்றும் நகைச்சுவை மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. மேலும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று சிறந்த படத்திற்கான விருதைப் பெற்று தந்தது.

- Advertisement -spot_img

Trending News