திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

3 திருமணங்களை அசால்டாக செய்து கொண்ட 5 பிரபலங்கள்.. ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டரையே வளைத்துப் போட்ட பிரபுதேவா

Celebrities 3 Marriages: ஒரே ஒரு திருமணம் செய்து கொண்டு எப்படியாவது சந்தோசமாக வாழ்ந்து விட வேண்டும் என போராடிக் கொண்டிருப்பவர்களின் மத்தியில், 2வது திருமணம் செய்து கொண்டு சிலர் சந்தோசமாக வாழ்ந்து வருவார்கள். ஆனால் அவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள் என்றால், ‘யார் சாமி நீங்க எல்லாம்’ என்றுதான் கேட்கும் அளவிற்கு 3 திருமணத்தை அசால்டாக செய்து கொண்ட ஐந்து பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

கமலஹாசன்: நான்கு வயதிலிருந்து 68 வயது வரை ரவுண்ட் கட்டி நடித்துக் கொண்டிருக்கும் கமலஹாசன், கோலிவுட்டின் முக்கிய அங்கமாகவே இருக்கிறார். இவர் திரையில் நடிப்பது வாழ்வது போலவே தெரியும். அதிலும் நடிகைகளுடன் முத்த காட்சிகளிலும் ரொமான்ஸ் காட்சிகளிலும் இவர் செய்த லூட்டி பார்ப்பதற்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

படங்களின் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் கமலஹாசன் ரொமான்டிக் மனிதன் தான். இவர் மூன்று திருமணம் செய்து இருக்கிறார். முதலாவதாக வாணி கணபதியை தொடர்ந்து நடிகை சரிகாவை அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து கொடுத்துவிட்டார். அதன் பின் மூன்றாவது ஆக நடிகை கௌதமியை திருமணம் செய்து கொள்ளாமல் பல வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்.

பிரபுதேவா: தன்னுடைய நடன திறமையால் இந்திய அளவில் பேமஸான பிரபுதேவா, பல படங்களில் கதாநாயகனாக நடித்ததுடன் படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவரும் மூன்று திருமணம் செய்து இருக்கிறார். முதல் மனைவியான ராமலதா உடன் விவாகரத்தான பிறகு நயன்தாராவுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதன் பிறகு உடல்நல குறைவால் பிசியோதெரபி ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த சிகிச்சையை மேற்கொண்ட பிசியோதெரபிஸ்டை காதலித்து 3வது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதுவரை பிரபுதேவாவின் குடும்பத்தில் பெண் வாரிசே இல்லை. அவருடைய முதல் மனைவிக்கும் சரி, பிரபுதேவாவின் தம்பிகளுக்கும் சரி ஆண் வாரிசுகள் மட்டுமே. முதல் முதலாக அவருடைய குடும்பத்திற்கு பிசியோதெரபி ஹிமானி சிங் மூலம் தான் பெண் வாரிசு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: கேஜிஎஃப் இயக்குனருடன் திடீர் சந்திப்பு.. பிரபாஸை ஒரு கை பார்க்க தயாரான ஆண்டவர்

யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்திய பெருமை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சேரும். அதுமட்டுமல்ல இவர் தான் ரீமிக்ஸ் கலாச்சாரத்தை தொடங்கி அதை பிரபலப்படுத்தியவரும் கூட. யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எல்லாம் மனதை வருடும் அளவுக்கு இருக்கும். அதிலும் காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு டானிக் கொடுக்கும் வகையில் யுவனின் பாடல்கள் இருக்கும். இதனாலேயே ‘யூத் ஐகான்’ என்றும் அழைக்கப்படுகிறார். தலைவனுக்கு இந்த அளவுக்கு எப்படி பீல் வருகிறது எனப் பார்த்தால் அவரை நிறைய பேர் காயப்படுத்தி இருக்கிறார்கள்.

அந்த வலியில் தான் இவர் பாட்டு போடுகிறார். இவரும் 3 திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியின் பெயர் சுஜயா சந்திரன். இவரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு மூன்றே வருடத்தில் விவாகரத்து வாங்கிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு ஷில்பா மோகன் என்பவரை 2011 ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் திருமணம் செய்து கொண்டார். அவரும் மூன்றே வருடத்தில் அவரை விட்டு சென்று விட்டார். இப்போது 2015 ஆம் ஆண்டு 3-வது முறையாக ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

Also Read: பாலிவுட்டில் பட்டைய கிளப்பும் 5 தமிழ் ஹீரோக்கள்.. கமலின் காலை வாரி விட்ட மோசமான அரசியல்

ராதிகா: வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தனி ஆதிக்கம் செலுத்திய நடிகை ராதிகாவும் மூன்று திருமணம் செய்திருக்கிறார். இவர் பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன்பின் ராதிகா, ரிச்சர்ட் ஹென்றி என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ராயனே என்ற மகளும் இருக்கிறார். அதன் பின் அவருடனும் சேர்ந்து வாழாத ராதிகா மூன்றாவதாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு, இப்போது அவருடன் தான் சேர்ந்து வாழ்கிறார். இவர்களுக்கு ராகுல் என்ற மகனும் இருக்கிறார்.

வனிதா: வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் ஏகப்பட்ட ரகளை செய்த வத்திக்குச்சி வனிதாவின் கணவர் லிஸ்ட் தான் போய்க்கொண்டே இருக்கும். இவர் முதல் முதலாக நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவரை கழட்டிவிட்ட வனிதா இரண்டாவதாக ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவரையும் விவாகரத்து செய்துவிட்டு 3-வது ஆக பீட்டர் பால் என்பவரை கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு ஏகப்பட்ட கேலிக்கூத்துக்கு ஆளானார். அவருடனும் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்துவிட்டு கழட்டிவிட்டார். பீட்டர் பால் சமீபத்தில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் வனிதா ராபர்ட் மாஸ்டருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்திருக்கிறார்.

Also Read: கிளாமர் ரோலினால் நாசமாய் போன 5 நடிகைகளின் வாழ்க்கை.. கமல் ஹீரோயினுக்கு வந்த நோய்

Trending News