திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தந்தையர் தினத்தில் அட்ராசிட்டி செய்த 5 பிரபலங்கள்.. உயிர், உலகத்தை தோளில் ஏற்றிய விக்னேஷ் சிவன்

Tamil Actor Actress: இன்று சர்வதேச அளவில்  தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் பிரபலங்கள் தந்தைகளுடனும், தந்தையாக இருக்கும் பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளுடனும் செய்த அட்ராசிட்டி புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது. அதிலும்  உயிர் மற்றும் உலகத்துடன்  விக்னேஷ் சிவன் தன்னுடைய முதல் தந்தையர் தினத்தை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.

காஜல் அகர்வால்: அப்பாவுடைய அரவணைப்பில் சிறுவயதில் இருந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் இன்று தன்னுடைய தந்தைக்கு வாழ்த்து தெரிவித்தவுடன், அவருடன்  இணைந்து புகைப்படம் எடுத்த போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதில் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும்  உடன் இருக்கிறார். ‘என்னுடைய தந்தை இல்லாமல்  நாங்கள் என்ன செய்திருப்போம்’  என்று அந்த புகைப்படத்துடன் கேள்வியும் எழுப்பி உள்ளார்.

தந்தையர் தினத்தில்  தன்னுடைய தந்தையுடன் காஜல் அகர்வால்

kajal-cinemapettai
kajal-cinemapettai

Also Read: பொன்னியின் செல்வனால் ஆதிபுருஷுக்கு ஏற்பட்ட பாதிப்பு.. மொத்த சீட்டுமே அனுமாருக்கு தானா?

வரலட்சுமி சரத்குமார்:  நடிகையான வரலட்சுமி சரத்குமார்  தந்தையர் தினத்தில் தன்னுடைய அப்பா சரத்குமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘ஐ லவ் யூ டாடி’ என குறிப்பிட்டு, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

தந்தையர் தினத்தில் தன்னுடைய தந்தையுடன் வரலட்சுமி

varalakshimi-cinemapettai
varalakshimi-cinemapettai

ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி கடைசியாக பொன்னியின் செல்வன் என்ற படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி நடித்து ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டார். இதற்கிடையில் ஜெயம் ரவி தன்னுடைய குழந்தைகள் மற்றும் தந்தையுடன் உள்ள அடுத்தடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். அது மட்டுமல்ல அவருடைய மனைவி ஆர்த்தி ரவி தன்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

தந்தையர் தினத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் ஜெயம் ரவி

jayam-ravi-cinemapettai
jayam-ravi-cinemapettai

Also Read: 2023 டாப் லிஸ்டில் இடம் பெற்ற 10 ஹீரோயின்கள்.. நயனை ஓரங்கட்ட எல்லை மீறிய சமந்தா

அட்லி: விஜய் உடன்  தெறி, மெர்சல், பிகில் போன்ற அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த அட்லி, நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை  உள்ளது. தந்தையர் தினத்தை முன்னிட்டு அட்லி தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பிரியா பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அத்துடன் ‘டாடா மீர், பெக்கி மற்றும் அம்மா உங்களை அதிகம் நேசிக்கிறோம். நீங்கள் இந்த உலகத்திலேயே சிறந்த அப்பா’ என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். அட்லியின் மகன் பெயர் மீர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தந்தையர் தினத்தில்  தன்னுடைய குழந்தையுடன் அட்லி

atlee-cinemapettai
atlee-cinemapettai

விக்னேஷ் சிவன்: விக்னேஷ் சிவன்- நயன்தாரா  தம்பதியர் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு  உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் எனப் பெயரிட்டனர். செல்லமாக உயிர், உலகம் என குழந்தைகளை அழைக்கும் விக்கி- நயன் தம்பதியர் அவ்வப்போது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். அதிலும் இப்போது விக்னேஷ் சிவன் தனது முதல் தந்தையர் தினத்தை குழந்தைகளுடன் மிக சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்தை தோளில் ஏற்றி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தந்தையர் தினத்தில்  தன்னுடைய குழந்தையுடன்  விக்னேஷ் சிவன்

vignesh-shivan-cinemapettai
vignesh-shivan-cinemapettai

Also Read: மொத்தமாய் அடி வாங்கி நொந்து போன விக்கி.. கெட்ட நேரம் வரலாம் அதுக்குன்னு இப்படி ஒரு நிலைமையா.!

இவ்வாறு இந்த ஐந்து பிரபலங்கள்தான் ஆண் தேவதைகளாக இன்று சோசியல் மீடியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல், தந்தையர் தினத்தில் எடுத்துக்கொண்ட ஸ்பெஷல் புகைப்படத்தையும் பதிவிட்டு  ட்ரெண்டாக்கி இணையத்தில் ரொம்பவே அட்ராசிட்டி செய்துள்ளனர்.

Trending News