ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒரு வாய்ப்பும் இல்ல, ஆனா லட்சக்கணக்கில் வருமானம் வாங்கும் 5 பிரபலங்கள்.. லட்சத்தில் புரளும் நடிகர் செந்தில்!

Actor Senthil: சம்பாதிக்கிறது விட அந்த காச சேர்த்து வைக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். சினிமா பிரபலங்களில் சிலரை நாம் எப்போது சில பேட்டிகளில் பார்க்கிறோம். ஒரு காலத்தில் ஆஹா ஓஹோ என்று இருந்தவர்கள் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு ரசிகர்களுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

பேரும் புகழும் இருக்கும் நேரத்தில் சில விஷயங்களை செய்ய தவறியதால் தான் இவர்களுக்கு இந்த நிலைமை. வருங்காலத்தை முன்பே கணித்து இந்த ஐந்து பிரபலங்கள் சமயோகிதமாக செயல்பட்டு இப்போது வாய்ப்பு இல்லனாலும் பரவாயில்லை என்று மாச வருமானமே லட்சக்கணக்கில் பெற்று வருகிறார்கள் அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

லட்சத்தில் புரளும் நடிகர் செந்தில்!

செந்தில்: நடிகர் செந்தில் பார்த்த உடனே மக்களுக்கு சிரிப்பு வந்துவிடும். கவுண்டமணி இடம் அடி வாங்கியே தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் குடி புகுந்தவர். வருமானம் நன்றாக இருக்கும் காலகட்டத்திலேயே நிறைய இடங்களை வாங்கி போட்டு அங்கே அப்பார்ட்மெண்டுகளை கட்டி வாடகைக்கு விட்டு விட்டார். ஒரு அப்பார்ட்மெண்டில் 48 போஷன் இருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த அப்பார்ட்மெண்டுகள் மூலம் நடிகர் செந்திலுக்கு பல லட்சங்களில் வாடகை கிடைக்கிறது.

அம்பிகா & ராதா: நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா சகோதரிகளாக எண்பதுகளின் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர்கள். இவர்களுக்கு வளசரவாக்கத்தில் ஏ ஆர் எஸ் ஸ்டுடியோ இருக்கிறது. இங்கு நிறைய சீரியல்கள் சூட்டிங் நடைபெற்று வருகின்றன. ஒரு நாள் வாடகை மட்டும் பத்து முதல் 15 ஆயிரம் ஆகும்.

சின்னி ஜெயந்த்: தன்னுடைய வித்தியாசமான காமெடியால் 90ஸ் கிட்ஸ்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் சின்னி ஜெயந்த். இவருடைய மகன் ஐஏஎஸ் பாஸ் ஆகி துணை கலெக்டராக இருக்கிறார். இவருக்கு டி நகரில் மூன்றடுக்கு காம்ப்ளக்ஸ் இருக்கிறது. இதன் மாத வாடகை மட்டும் லட்சக்கணக்கில் கைகளில் வந்து சேருகிறது.

பிரசன்னா – சினேகா: அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா நட்சத்திர தம்பதிகளின் வரிசையில் இணைந்தவர்கள் தான் பிரசன்னா மற்றும் சினேகா. சினேகா பல விளம்பர படங்களில் நடிக்க கூடியவர். மேலும் சமீபத்தில் சினேகாலயா என்னும் புடவை கடையை ஆரம்பித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பெங்களூருவில் நிறைய அப்பார்ட்மெண்டுகள் கட்டி, மாத வாடகைக்கு விட்டிருக்கிறார்.

டி ராஜேந்தர்: இயக்குனர் டி ராஜேந்தர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். என்னதான் இவருடைய மகன் சிம்பு சினிமாவில் ஹீரோவாக இருந்தாலும், இவர் தன்னுடைய சொந்த வருமானத்திற்கும் வழிவகை செய்திருக்கிறார். பூந்தமல்லியில் இவருக்கு ஏக்கர் கணக்கில் சொந்த நிலம் இருக்கிறது. இங்கு எப்போதும் சினிமா ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Trending News