புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

குந்தவையிடம் காதல் மயக்கத்தில் இருந்த 5 ஹீரோக்கள்.. மொத்தமாய் அல்வா கொடுத்து ஓடிய ராணா

நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற பிறகு மாடலிங் துறையில் சில காலம் இருந்தார். அதன் மூலம் சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளை பயன்படுத்தி பின்னர் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே அழகுடன் தன்னுடைய 40 வது வயதிலும் திரிஷா ஜொலிக்கிறார். இவருடைய அழகில் மயங்கி இவரை காதலித்த ஐந்து சினிமா பிரபலங்கள் இருக்கிறார்கள். இந்த காதல் எல்லாமே வதந்தியுடன் அப்படியே முடிந்து விட்டது.

விக்ரம்: நடிகர் விக்ரம் மற்றும் த்ரிஷா இணைந்து சாமி படத்தில் நடித்தனர். இந்த படத்தின் மூலம் இவர்கள் இருவரது ஜோடி தமிழ் சினிமாவில் பயங்கர வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் இருவரும் இணைந்து பீமா திரைப்படத்திலும் நடித்தார்கள். நடிகர் விக்ரம் மற்றும் திரிஷா நெருக்கமான உறவில் இருப்பதாக அப்போது வதந்திகள் கிளம்பின. பின்னர் இருவரும் சேர்ந்து எந்த படமும் நடிக்கவில்லை. தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

Also Read:வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சோகமாக முடிந்த 5 படங்கள்.. தியேட்டரில் கடைசி வரை ஏங்க வைத்த ராம்-ஜானு

விஜய்: நடிகை திரிஷா சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வந்த நேரத்தில் முதன் முதலில் கிசுகிசுக்கப்பட்டது நடிகர் விஜய்யுடன் தான். கில்லி திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாக வதந்திகள் பரவின. அதை கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து இருவரும் இணைந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் விஜய்யின் சொந்த வாழ்க்கையில் இவர்களது உறவால் பிரச்சனை வந்ததால் சேர்ந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டனர். தற்போது லியோ திரைப்படத்தில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.

சிம்பு: த்ரிஷாவும், சிம்புவும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நல்ல நண்பர்கள். த்ரிஷாவுடன் இணைந்து சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா என்னும் திரைப்படத்தில் நடித்த பிறகு இருவருக்கும் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொதுவெளிகளில் சேர்ந்து சுற்றவும் ஆரம்பித்தார்கள். அதன்பின்னர் இவர்களது காதல் பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை.

Also Read:சைக்கோ இயக்குனரை வளைத்து போட்ட பால் கொழுக்கட்டை.. சம்பவ இடத்துக்கே சென்று பளார் விட்ட மனைவி

ராணா: தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராணா, நானும் திரிஷாவும் காதலித்தோம் என பிரபல இந்தி நிகழ்ச்சியான காபி வித் கரன் நிகழ்ச்சியில் வெளிப்படையாக சொன்னார். அதேபோன்று பல மேடைகளிலும் இருவரது காதல் பற்றியும் பேசி இருக்கிறார். இந்த காதல் திருமணம் வரை செல்லும் என்று அனைவரும் நினைத்த நேரத்தில், ராணா த்ரிஷாவை நேக்காக கழட்டி விட்டு விட்டு தொழிலதிபரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மாடலிங் மேன்: த்ரிஷா பிரபலமாவதற்கு முன் ஹனி ட்ராப் முறையில் தொழிலதிபரின் மகனுடன் உறவில் இருந்திருக்கிறார். அந்த மாடலிங் துறையை சேர்ந்த வரை முழுக்க தன்னுடைய கஸ்டடிக்கு கொண்டு வந்திருக்கிறார். பிறகு மிகப்பெரிய பிரச்சனை வந்ததால் வெற்றுக் காசோலைகளை பெற்றுக் கொண்டு அவரை விட்டு பிரிந்ததாக அப்போது செய்திகள் வெளிவந்தன.

Also Read:ஏடாகூடமான நடிப்பு, பெயரைக் கெடுத்துக்கொண்ட வசீகர நடிகை.. ஒல்லி நடிகருக்கு பயந்து நடந்த திருமணம்

Trending News