திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

அரசியல் ஆசையால் சர்ச்சைக்குள்ளான 5 பிரபலங்கள்.. புலி வருதுன்னு பூச்சாண்டி காட்டிய சூப்பர் ஸ்டார்

சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்த பல நடிகர்களும் அரசியலிலும் தனி முத்திரையை பதித்திருக்கின்றனர். இதற்கு உதாரணமாக எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற பல பிரபலங்களை சொல்லலாம். அந்த வழியில் அடுத்தடுத்து வந்த தலைமுறைகளும் அரசியலில் இறங்க தீவிரம் காட்டி வருகின்றனர். அதில் சிலர் ஜெயித்தாலும் பலருக்கு அரசியல் என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. அந்த வகையில் அரசியல் ஆசையால் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமான ஐந்து பிரபலங்களை பற்றி இங்கு காண்போம்.

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உலக அளவில் பிரபலமாக இருக்கும் இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை அவருடைய ரசிகர்களுக்கு இருந்தது. அதை ஏற்றுக் கொண்ட ரஜினியும் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் பல வருடங்கள் ஆகியும் அவருடைய அரசியல் என்ட்ரி மட்டும் நடக்கவே இல்லை.

அதாவது புலி வருது புலி வருதுன்னு பூச்சாண்டி காட்டிய சூப்பர் ஸ்டார் திடீரென அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிக்கை விட்டார். இதற்குப் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவருடைய ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாகவே இன்று வரை இருக்கிறது.

Also read: மகள்களிடம் மாட்டி விழி பிதுங்கி நிற்கும் ரஜினி.. ஐஸ்வர்யா எடுத்துள்ள அதிரடியான முடிவு.!

விஜய் தற்போதைய தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக இருக்கும் இவருக்கு அரசியல் ஆசை இருப்பது பலருக்கும் தெரியும். அதன் காரணமாகவே இவர் பல விஷயங்களை மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறார். அதனால் இவர் பல சர்ச்சைகளை சந்திக்கும் நிலைமைக்கு வந்தார். அதிலும் முக்கியமாக இவர் வீட்டில் நடந்த வருமான வரி துறையின் ரெய்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிலிருந்தே விஜய் தன்னுடைய அரசியல் ஆசையை சில காலங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் எப்போது வேண்டுமானாலும் இவருடைய அரசியல் வருகை இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

விஷால் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு திடீர் அரசியல் ஆசை வந்தது. அதன் முன்னோட்டமாகவே இவர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அதற்கு அவர் எடுத்த முயற்சி பல சர்ச்சைகளை உண்டு பண்ணியது. அதைத்தொடர்ந்து சுயேச்சையாக போட்டியிடுவதற்கும் இவர் மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் அவர் அரசியலுக்கான அஸ்திவாரத்தையும் போட்டு வருகிறார். அது எந்த அளவுக்கு அவருக்கு ஒர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

Also read: நம்பி நடிச்சதுக்கு வச்சு செய்த சங்கர்.. அங்கவை சங்கவை அப்பாவிற்கு நடந்த ஏமாற்றம்

குஷ்பூ 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த இவர் இப்போதும் நடிப்பில் கவனம் செலுத்தி கொண்டு தான் இருக்கிறார். ஆனால் பல வருடங்களாகவே இவர் அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் ஒரு கட்சியில் இல்லாமல் அடுத்தடுத்த கட்சிகளுக்கு இவர் தாவுவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியதும் உண்டு. அது மட்டுமல்லாமல் இவர் ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். இருப்பினும் குஷ்பூ தன் அரசியல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார்.

காயத்ரி ரகுராம் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் இப்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முன்னணி அரசியல் கட்சியில் செயல்பட்டு வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பேசியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவர் அந்த கட்சியில் இருந்து விலகினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் மற்றொரு கட்சியில் இணைய இருப்பது பெரும் விவாதமாக பேசப்பட்டு வருகிறது.

Also read: சினிமாவிற்கு வந்து அசிங்கப்பட்ட 5 பெரிய மனுசங்க.. விஜய் படத்தோடு சினிமா கேரியரை முடித்துக் கொண்ட பழ கருப்பையா

- Advertisement -spot_img

Trending News