வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் அரசியலுக்கு வந்ததால் பொறாமையில் பொங்கி எழும் 5 பிரபலங்கள்.. மறைமுகமாக எதிர்க்கும் பெரும்புள்ளிகள்

Vijay entry in Politics: விஜய் ஹீரோவாக எந்த அளவிற்கு ஜெயித்திருக்கிறாரோ, அதே மாதிரி அரசியலிலும் ஜெயித்து ஆகவேண்டும் என்று மும்மரமாக பல வேலைகளில் இறங்கி அதற்கான முயற்சி எடுத்து வருகிறார். அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தி மாணவர்களுக்கு பரிசு கொடுப்பது, நூலகம் திறப்பது, வெள்ள நிவாரணம் பொருட்களை வழங்குவது போன்ற விஷயங்களை செய்து அரசியலில் நுழைவதே உறுதிப்படுத்தி விட்டார்.

அந்த வகையில் பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். ஆனால் இந்த விஷயங்கள் செய்வது அனைத்தும் அவருடைய அரசியலில் வெற்றியை பார்ப்பதற்காக தான் என்று ஒரு பக்கம் பேச்சு நிலவி வருகிறது. எங்கே இவர் ஜெயித்து விடுவாரோ என்ற பயத்தில் சில பிரபலங்கள் பொறாமையில் பொங்கி எழுகிறார்கள்.

அவர்கள் யாரெல்லாம் என்றால், வாரிசு அரசியல்வாதியாக தொடர்ந்து ஆட்சி செய்யும் திமுக கட்சியின் உறுப்பினராக இருக்கும் உதயநிதி. இவர் தன்னுடைய அப்பா மு க ஸ்டாலினுக்கு பிறகு அந்த இடத்திற்கு எப்படியாவது போக வேண்டும் என்று நினைக்கிறார். இப்படி இருக்கும் சமயத்தில் விஜய்க்கு கிடைக்கும் ஆதரவை நினைத்து அவ்வப்போது மறைமுகமாக சில விஷயங்களில் தாக்கி கொண்டு வருகிறார்.

Also read: விஜய்யின் அரசியலுக்கு ஆபத்தை வர வைக்கும் வெங்கட் பிரபு.. படத்தில் நடிக்க வந்தது குத்தமா!

அதே மாதிரி தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரேமலதாவும் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறார். இவர்களை தொடர்ந்து சினிமாவில் இருக்கும் பிரபலங்களும் விஜய் அரசியலில் நுழைவதால் பொறாமையில் பொங்கி எழுகிறார்கள். தற்போது விஜய் அஜித் என்று சொல்வதைவிட விஜய் ரஜினி போட்டி போடுகிறார்கள் என்ற நிலைமை மாறிவிட்டது.

அதற்கு ஏற்ற மாதிரி ரஜினி அரசியலில் பின்வாங்கிய போது தன்னைவிட வயது சிறியவனாக இருக்கும் விஜய் எங்கே அரசியலில் ஜெயித்து விட்டால் நம்முடைய மரியாதை குறைந்து விடுமோ என்ற தயக்கத்தில் இருக்கிறார். அடுத்தபடியாக சூர்யா, அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு இவரால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

அப்படி இருக்கும் பொழுது இவரை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு விஜய் பல விஷயங்களை செய்வது இவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே மாதிரி நடிகர் விஷால் நடிகர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து கொண்டு அடுத்த கட்டமாக எப்படியாவது அரசியலிலும் நுழைய வேண்டும் என்று நினைத்த இவருக்கு விஜய்யின் அரசியல் என்டரி மிகப்பெரிய ஜர்க்காக மாறிவிட்டது.

Also read: இங்கிலீஷ் டைட்டில் வச்சா இப்படித்தான் சிக்குவீங்க! விஜய் தலையில் இடியை இறக்கிய வெங்கட் பிரபு

Trending News