செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Vijay: விஜய்க்காக இதை கூட பண்ண மாட்டோமா.. கோட் மூலம் சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் 5 பிரபலங்கள்

Vijay: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனாலேயே இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அடுத்த மாதம் விஜய்யின் பிறந்தநாள் அன்று முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிடவும் பட குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஐந்து பிரபலங்கள் கேமியோ ரோலில் நடிக்க இருக்கும் செய்தி கசிந்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மைக் மோகன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதில் இன்னும் ஐந்து பிரபலங்கள் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பது ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

விஜய்க்காக இணைந்த பிரபலங்கள்

அதன்படி சிவகார்த்திகேயன், திரிஷா, வெங்கட் பிரபு, விஜயகாந்த் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் என ஐந்து பேர் நடிக்க இருக்கின்றனர். இதில் சிவகார்த்திகேயன் நடிப்பது மீடியாவில் எப்போதோ கசிந்து விட்டது.

அதேபோல் விஜயகாந்த் ஏ ஐ முறையில் வர இருப்பதும் தெரிந்த விஷயம் தான். ஆனால் திரிஷாவின் கேமியோ தான் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

நிச்சயம் இந்த ஐந்து சர்ப்ரைஸும் விஜய்க்காக மட்டும் தான். அதனாலேயே திரிஷாவும் இதற்கு சம்மதித்து இருக்கிறார். ஆக மொத்தம் வெங்கட் பிரபு இப்படத்தின் மூலம் மிகப்பெரும் சம்பவத்திற்கு தயாராகி விட்டார் என்பது மட்டும் தெரிகிறது.

Trending News