சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சினிமாவிலும், சீரியலிலும் வாய்ப்பில்லாமல்.. சம்பந்தமே இல்லாமல் டிவி ஷோவில் ஜட்ஜ் ஆன 5 பிரபலங்கள்

பன்முகத் திறமைகளை கொண்டும் அதற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காததால், கிடைத்த வாய்ப்பை ஏற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் பிரபலங்கள். அவ்வாறு காலகட்டத்திற்கு ஏற்ப மக்களுக்கு பிடித்தவாறு தங்களை மாற்றிக் கொள்கின்றனர்.

மேலும் தங்களை புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால் குடும்ப கஷ்டத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். அவ்வாறு பிடித்த பயணத்தை மேற்கொள்ள முடியாமல் பல பிரபலங்கள் இருக்கும் நிலையில், சம்பந்தமே இல்லாமல் டிவி ஷோவில் ஜட்ஜ் ஆக மாறிய 5 பிரபலங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: சூப்பர் சிங்கரில் 50 லட்சம் பரிசை தட்டிச்சென்ற வெற்றியாளர் யார் தெரியுமா?

ஈரோடு மகேஷ்: இவர் ஒரு சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளர், எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக பணிப்புரிந்திருக்கிறார். அதை தொடர்ந்து 2012ல்  வெள்ளித்திரை  சட்டம் ஒரு இருட்டறை என்னும் படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பின் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அவற்றில் பெரிதாக எந்த ஒரு ரெஸ்பான்சும் கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவே மாறி வருகிறார்.

தாடி பாலாஜி: ஒரு காலகட்டத்தில் சினிமாவில் பெரிய நகைச்சுவை ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் பெருமையை பெற்றவர். இவரின் காமெடிக்கு என்று ரசிகர் கூட்டம் உண்டு. அதன்பின் பட வாய்ப்பினை இழந்த இவர் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக களம் இறங்கினார். மேற்கொண்டு ஜட்ஜ்க்குரிய காமெடிகள் வொர்க் அவுட் ஆகாமல் கெஸ்ட் ரோலில் தலை காட்டி வருகிறார்.

Also Read: அதிக வியூசை பெற்று முதல் 5 இடத்தை பிடித்த பாடல்கள்.. அரபிக் குத்தை மிஞ்சிய ரவுடி பேபி

கிரேஸ்: ஒரு காலகட்டத்தில் இவரின் பாடலால் சினிமாவில் பெரிதும் பேசப்பட்டவர். அதன்பின் சில துணை கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் பாடலை கைவிட்ட இவர் தனக்கு சம்பந்தமே இல்லாத காமெடி ஷோவில் ஜட்ஜ் ஆக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்நிகழ்ச்சியில் இவரை வைத்தே காமெடி செய்வது வழக்கமாக மாறிவிட்டது. மேற்கொண்டு தற்பொழுது அத்தகைய வாய்ப்பும் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

ஸ்ருதிகா: பிரபல நடிகரின் பேத்தியான இவர் சிபாரிசில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2002ல் ஸ்ரீ என்னும் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன் பின் சில படங்களில் நடித்த இவர் பல வருடங்கள் கழித்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இவரின் ஒப்பில்லாத காமெடிகள் எரிச்சலை ஏற்படுத்தினாலும், காரணம் இல்லாமல் இவரே சிரித்துக் கொள்வதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார். இவ்வாறு கிடைத்த வாய்ப்பை ஏற்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தலை காட்டி வருகிறார்.

Also Read: டாப் ஹீரோக்களுக்கு தண்ணி காட்டும் கமல்.. கதி கலங்கி போக வைத்த சம்பவம்

ரம்யா பாண்டியன்: இவர் 2015ல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். அதன்பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதற்கு பின்பு பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் போட்டோ சூட் எடுத்து வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஐட்டம் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவ்வாறு தனக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் இவர் கிடைத்த வாய்ப்பை கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Trending News