ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஊறிப் போய் நடிக்கும் 5 பிரபலங்கள்.. கமலையே பிரமிக்க வைத்த திரிபுரசுந்தரி

5 celebrities in any character given to them best: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள் நடிகைகளையும் தாண்டி எதார்த்தமான நடிப்பால் சில கேரக்டர்கள் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் நம்பி எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் அதை பின்னி பெடல் எடுக்கும் வகையில் அதிலேயே ஊறிப்போயி நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிரபலங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

எம் எஸ் பாஸ்கர்: விசுவின் திருமதி ஒரு வெகுமதி படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக நுழைந்தார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் இவருக்கு கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தற்போது பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலம் ஆகி விட்டார். அதற்கு காரணம் இவர் நடிப்புக்காக எடுத்துக்கிட்ட மெனக்கீடு இவரை இந்த அளவிற்கு உயர்த்திருக்கிறது. முக்கியமாக ஆங்கில பிரமாண்ட படங்களான ஜுராசிக் பார்க் மற்றும் ஸ்பைடர் மேன் போன்ற படங்களில் இவருடைய குரல் தான் பின்னணியில் கொடுத்திருக்கிறார். காமெடி காட்சியா இருக்கட்டும் சீரியஸான கதாபாத்திரத்திலும் நடித்து தனித்துவத்தை காட்டக் கூடியவர்.

ஊர்வசி: சிறந்த நடிகையாகவும், குணச்சித்திர கேரக்டரிலும், முக்கியமாக ஆட்சி மனோரம்மாவிற்கு பிறகு அவருடைய இடத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு காமெடியிலும் கலக்கி இருக்கிறார். இவர் சினிமாவுக்கு கிட்டத்தட்ட வந்து 39 வருஷங்கள் ஆகி இருக்கிறது. ஆனாலும் ரஜினியுடன் இன்னும் ஒரு படத்தில் கூட இவர் இணையவில்லை. அதற்கு மாறாக கமலுடன் சேர்ந்து நடிப்பை பிரமாதமாக கொடுத்து கமலை பிரமிக்க வைக்கும் அளவிற்கு மைக்கேல் மதன காமராஜன் படத்தில் திரிபுரசுந்தரி கேரக்டரை அற்புதமாக கொடுத்திருக்கிறார்.

Also read: குண்டக்க மண்டக்க பேசி மரியாதையை கெடுத்துக் கொண்ட 5 நடிகர்கள்.. ராக்கெட் சர்ச்சையில் நாசமா போன பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்: நடிகர், குணச்சித்திர கேரக்டர் மற்றும் சிறந்த வில்லன் என்று சொல்லும் அளவிற்கு பல திறமைகளை தன்னுடன் வைத்துக்கொண்டு கதைக்கு ஏற்ப நடிப்பை இவருக்கு ஈடாக வேறு யாராலும் கொடுக்க முடியாது என்ற சொல்லும் அளவிற்கு தனித்துவமாக நடிக்கக் கூடியவர். இவர் வில்லனாக நடித்தாலும் அதை ரசித்துப் பார்க்கும் அளவிற்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவரை நம்பி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனக்கச்சிதமாக நடிப்பார்.

பசுபதி: வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் காமெடியன் என அனைத்திலும் இவருடைய பன்முக திறமையை வெளிக்காட்டி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். முக்கியமாக இவர் வில்லனாக நடித்த படங்களில் இவருடைய நடிப்பை மறக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு மக்களிடமிருந்து பல பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

சத்யராஜ்: ஆரம்பத்தில் வில்லனாக சினிமாவிற்குள் நுழைந்தவர். போகப் போக தன்னுடைய திறமையால் ஹீரோவாகவும் வளர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தற்போது வயது ஆகினாலும் சினிமாவை விட்டு நான் போவதாக இல்லை என்பதற்கு ஏற்ப நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்களிடம் கைத்தட்டல்களை வாங்கும் அளவிற்கு கச்சிதமாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்புக்கு தற்போது வரை பாராட்டுக்கள் குவிந்து கொண்டே வருகிறது.

Also read: சத்யராஜ் இயக்கிய ஒரே படம் 125 நாள் ஓடி சாதனை.. தயாரிப்பாளராக கல்லா கட்ட முடியாத 3 படங்கள்

Trending News