வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மதத்தை வைத்து கூடு விட்டு கூடு பாயும் 5 பிரபலங்கள்.. இந்துவா கிறிஸ்டின் மதமா?

சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தங்களது பெயர்களை மாற்றிக் கொள்வது போலவே அவ்வபோது மதங்களை மாற்றிக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுவர். இதில் பல முக்கிய நடிகர்,நடிகைகள் அடங்குவார்கள். அதில் நடிகை நயன்தாரா கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார். அதேபோல நடிகை குஷ்பு, ஜோதிகா உள்ளிட்டோரும் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார்.

இப்படி நம் தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளனர். அந்த பிரபலங்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ராகவா லாரன்ஸ்: சிறுவயதிலிருந்தே நடன பிரியரான ராகவா லாரன்ஸ்,நடிகர், நடன கலைஞர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்த குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து வந்த நிலையில், ரஜினிகாந்தின் மீது இருந்த பற்றின் காரணமாக அவர் வணங்கும் ராகவேந்திரா கடவுளை,ராகவா லாரன்ஸ் பின்பற்ற ஆரம்பித்தார்.மேலும் லாரன்ஸ் என்ற தனது பெயருக்கு முன்னாள் ராகவா என்ற பெயரை மாற்றிக்கொண்டு ஹிந்து மதத்தை தழுவி வாழ்ந்து வருகிறார்.

Also Read :திருமணத்திற்குப் பின் கமலஹாசனுடன் நடிக்க மறுத்த நடிகை.. இப்ப ராகவா லாரன்ஸுடன் ஜோடி

நக்மா: நடிகை ஜோதிகாவின் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகை நக்மா. இவர் வளரும்போது ஹிந்து மதத்திலேயே வளர்ந்து வந்தார் .பாஷா உள்ளிட்ட பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்த நக்மா, திருமணத்திற்குப் பின்பு விவாகரத்து பெற்ற நிலையில், அரசியலில் ஈடுபட்டார்.பின்னர் நக்மா சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தை தழுவி உள்ளார்.

இளையராஜா: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசைக்கு முன்னிலை வகித்தவர். இவர் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த நிலையில் டானியல் ராசப்பா என்ற தனது பெயரை ஹிந்துவாக மாறிய பின் இளையராஜா என்று மாற்றிக்கொண்டார். சாமியார் ரமண ரிஷியின் மீது பற்று கொண்ட இளையராஜா கிறிஸ்துவ மதத்தின் மீது தனது நம்பிக்கையை உடைத்து,ஹிந்து மதத்தை பின்பற்றி வருகிறார். இவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் ஹிந்து மதத்திலிருந்து, இஸ்லாமிய மதத்திற்கு தழுவி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read :இளையராஜா அதிகமாக இசையமைத்தது இவர் படத்துக்கு தான்.. ரஜினியை மட்டும் தவிர்த்த இசைஞானி

ஆனந்த் பாபு: பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் மகனான ஆனந்த் பாபு தமிழ் சினிமாவின் நடன கலைஞராகவும்,நடிகராகவும் வலம் வந்தவர். பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் ,சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தியவர். இவர் ஹிந்துவாக பிறந்து வாழ்ந்த நிலையில்,தற்போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறி வாழ்ந்து வருகிறார்.

ராமராஜன்: தமிழ் சினிமாவில் இவரது பெயரை கேட்டால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வளவு பிரபலமான நடிகர் ராமராஜன் ஆரம்ப காலகட்டத்தில் எம்ஜிஆரின் மீதுள்ள பற்றால் சினிமாவில் நடிக்க வந்து பல வெற்றி படங்களை கொடுத்தார். நடிகை நளினியை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில், ஹிந்து மதத்தில் இருந்து மாறி சமீபத்தில் கிறிஸ்துவ மதத்திற்கு தழுவியுள்ளார்.

Also Read :ராமராஜன் மறுத்த 5 இரண்டாம் பாக படங்கள்.. விஜய் மில்டனை விரட்டியடித்த வில்லுபாட்டுகாரன்

Trending News