சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

ராஜமவுலியின் முதல் சாய்சே இவர்தானாம்.. இப்ப வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தும் நடிகை

சினிமாவில் ஒரு சில கதாபாத்திரத்திற்கு சில நடிகர், நடிகைகளை படக்குழு அணுகும்போது படத்தின் கதை பிடித்திருந்தாலும் கால்ஷீட் போன்ற சில பிரச்சனைகளால் அந்தப்படத்தில் அவர்களால் நடிக்க முடியாமல் போய்விடுகிறது. அதன் பின்பு அவர்களுக்கு பதிலாக வேறு ஒரு பிரபலம் நடித்து அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமான 5 கதாபாத்திரங்களை முதலில் தவறவிட்ட பிரபலங்களை பார்க்கலாம்.

எந்திரன் : இப்படத்தில் ப்ரொஃபஸர் போரோ கதாபாத்திரத்தில் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனை தான் முதலில் ஷங்கர் அணுகியுள்ளார். உடனே ரஜினிக்கு போன் போட்டு அமிதாபச்சன் பேசியுள்ளார். அப்போது ரஜினி மக்கள் உங்களை வில்லனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதைச் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். அதனால் அந்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனுக்கு பதிலாக மூத்த நடிகர் டேனி டென்சோங்பா நடித்திருந்தார்.

இரும்புத்திரை : விஷால் நடிப்பில் கடந்த 2018ல் வெளியான இரும்புத்திரை படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் மிரட்டி இருந்தார். ஆனால் இரண்டு நடிகர்களின் நிராகரிப்புக்கு பிறகுதான் அர்ஜுனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. எஸ் ஜே சூர்யா மற்றும் ஃபகத் பாசில் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு இரும்பு திரையில் அர்ஜுன் நடித்து மிகப்பெரிய பாராட்டை பெற்றார்.

புஷ்பா : இப்படத்தில் பன்வர் சிங் ஷெகாவத் வேடத்தில் விஜய் சேதுபதிக்கு முதலில் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அப்போது விஜய் சேதுபதி பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு ஃபகத் பாசில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புஷ்பா : இப்படத்தில் இயக்குனர் சுகுமார் முதலில் மகேஷ்பாபுவை வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் மகேஷ்பாபு இப்படத்தின் ஹீரோவின் தோற்றமும் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கவும் விருப்பம் இல்லாததால் மறுத்துவிட்டார். அதன்பிறகு அல்லு அர்ஜுன் இப்படத்தில் ஒப்பந்தமானார்.

ஆர் ஆர் ஆர் : ராஜமவுலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான ஆர் ஆர் ஆர் படத்தில் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஸ்ரேயா நடித்த சரோஜினி கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிப்பதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தை தவற விட்டதற்காக தற்போதுவரை பிரியாமணி கவலைப்பட்டு வருகிறார்.

Trending News