சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

முதல் மனைவியை வெறுத்து ஒதுக்கி 2ம் திருமணம் செய்த ஐந்து பிரபலங்கள்.. இப்பவும் மாறாத அமலாபால்

இல்லற வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் மறுமணம் செய்வது சாதாரண விஷயமாக மாறியுள்ளது. இது வெளியில் சாதாரணமாக பார்க்கப்பட்டாலும் திரைப்பிரபலங்கள் என்பதால் பெரிய அளவில் பேசப்படுகிறது. அந்தவகையில் மறுமணம் செய்துகொண்ட 5 சினிமா பிரபலங்களை தற்போது பார்க்கலாம்.

ஏஎல் விஜய் : பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஏ எல் விஜய் தெய்வத்திருமகள் படத்தை இயக்கும்போது அதில் நடித்த அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஏ எல் விஜய், அமலாபால் இடம் இருந்து விவாகரத்து பெற்று டாக்டர் ஆர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர்களது விவாகரத்துக்கு காரணம் அமலாபால் படங்களில் அதிக கவர்ச்சி காட்டுவது தான் என்று செய்திகள் வெளியானது. இப்பவும் சுதந்திரமாக கவர்ச்சி காட்டி நடித்து  வேறு மொழிகளில் நடிப்பது மட்டும் இல்லாமல் வெப் சீரியஸில் கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால்.

டி இமான் : பிரபல இசையமைப்பாளர் டி இமான் மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 13 வருட திருமண பந்தத்தில் இருந்து விவாகரத்துப் பெற்ற இமான் சமீபத்தில் அமேலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விஷ்ணு விஷால் : நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011ல் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2018 இறுதியில் இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரிவதாக தகவல் வெளியானது. அதன்பிறகு விஷ்ணு விஷால் கடந்த 2021ல் ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜுவாலா கட்டாவுக்கும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

கார்த்திக் : கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்த கார்த்திக் பாடகி சுஜித்ராவை திருமணம் செய்து கொண்டார். இடையில் சுஜி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது. இதனால் கார்த்திக், சுஜித்ரா இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில் நடிகை அமிர்தா சீனிவாசன் என்பவரை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார்.

பிரேமா : கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்தவர் பிரேமா. தமிழில் சத்யராஜ் உடன் இணைந்த அழகேசன் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் ஜீவன் அப்பாச்சு என்பவரை 2006இல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த பிரேமா 44 வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

Trending News