செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் மகன் சஞ்சய் நடிக்க வேண்டும் என அடம்பிடிக்கும் 5 பிரபலங்கள்.. நிராகரித்த முக்கிய காரணம் இது தான்

தன் தந்தையின் சினிமா பயணத்தால் ஈர்க்கப்பட்டு நடிப்பில் இறங்கியவர் தான் விஜய். அதை தொடர்ந்து தன் நடிப்பால் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ என்ற அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். தற்பொழுது இவரின் மகனை சினிமாவில் இழுத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் களம் இறங்கி உள்ளனர்.

விஜய்யின் மகனான சஞ்சய் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு குறும் படங்களை இயக்கி வருகிறார். தன் தந்தை புகழ் பெற்ற நடிகர் என்றாலும் எந்த ஒரு சிபாரிசும் இல்லாமல் தன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவரை நடிக்க வேண்டி கேட்டுக் கொண்ட 5 பிரபலங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: ஒர்க் அவுட்டில் கிக் ஏற்றிய பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள்.. கவர்ச்சியால் படாத பாடுபடும் ஜிம் மாஸ்டர்

சுதா கொங்காரா: இவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் இயக்கிய பல படங்கள் வெற்றி கண்டுள்ளன. அதிலும் குறிப்பாக இறுதி சுற்று படம் இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. இவர் தற்பொழுது விஜய்யின் மகனான சஞ்சய்யை வைத்து ஒரு படம் எடுக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் தனக்கு நடிப்பை விட இயக்கத்தில் தான் ஆர்வம் இருப்பதாக கூறி நிராகரித்துவிட்டாராம்.

அல்போன்ஸ் புத்திரன்: பன்முகத் திறமை கொண்ட இயக்குனரான இவர் மலையாளத்தில் பல படங்களை இயக்கி உள்ளார். பிரேமம் படத்திற்கு பின்பு இவர் சஞ்சய் தன் படத்தில் நடிக்க வேண்டி விஜய்யிடம் கூறியிருக்கிறார். அதை தொடர்ந்து கதை கேட்ட சஞ்சய், கதை நல்லா இருக்கிறது ஆனால் தற்பொழுது எனக்கு விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டாராம். அதன்பின் ஒரு தந்தையாக விஜய்யும் அவரை வற்புறுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கேரியர் பெஸ்டாக வெங்கட் பிரபு கொடுத்த 5 படங்கள்.. விஜய் மெர்சலான சூப்பர் ஹிட் படம்

ஏ ஆர் முருகதாஸ்: இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கஜினி, துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் தான். மேலும் இவை நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தன. இந்நிலையில் புது சப்ஜெக்ட்டில் படம் எடுக்க விரும்பிய இவர் தன் படத்தில் புதுமுக ஹீரோவை தேடி வருகிறார். அதை தொடர்ந்து சஞ்சயிடம் அணுகி உள்ளார் முருகதாஸ். ஆனால் அவர் தற்போது குறும்படங்களில் ஆர்வம் காட்டி வருவதால் இப்படத்தை ஒப்பு கொள்ளவில்லையாம்.

விஜய் சேதுபதி: தன் எதார்த்தமான நடிப்பால் பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர் தான் தயாரிக்கும் படத்தில் விஜய்யின் மகனான சஞ்சயை நடிக்க வைக்க போவதாக கூறி வருகிறார். ஆனால் சஞ்சய் அதை நிராகரித்து விட்டு, தன் இயக்கத்தில் வெளியாகும் முதல் படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதாக கூறி வருகிறார்.

Also Read: அந்த மாவட்டங்களை குறி வைத்திருக்கும் லியோ.. பிறந்த நாளில் மதுரையில் நடக்கப் போகும் சம்பவம்

அட்லி: விஜய்யை வைத்து பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர் அட்லி. இந்நிலையில் இவரின் மகனான சஞ்சையை வைத்து படம் எடுக்க போவதாக விஜய் இடம் கூறியிருக்கிறார். அதற்கு தற்பொழுது தன் மகன் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருவதால் இதற்கான நேரம் வரும்போது அவனே அவனை அடையாளப்படுத்திக் கொள்வான் என்று பதில் அளித்துள்ளார்.

Trending News