திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வெள்ளித்திரையில் ஜொலிக்கும் 5 விஜய் டிவி பிரபலங்கள்.. ஜெயிலரால் ஏறிய நெல்சனின் மவுசு

Vijay Tv: பொதுவாக விஜய் டிவியில் மட்டும் வேலை கிடைத்து விட்டால் எப்படியும் பெரிய இடத்திற்கு சென்று விடலாம் என பலர் கருதுகின்றனர். ஏனென்றால் இப்போது வெள்ளித்திரையில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பலரும் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் தான். அப்படி வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் 5 விஜய் டிவி பிரபலங்களை பார்க்கலாம்.

சந்தானம் : ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் தான் சந்தானம். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க கொடிகட்டி பறந்தார். இப்போது ஹீரோவாகவும் படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read : ராஜேஷ் இயக்கத்தில் ஹீரோக்கு இணையாக சந்தானம் நடித்த 5 படங்கள்.. தேனடையை விடாமல் துரத்திய பார்த்தா

சிவகார்த்திகேயன் : விஜய் டிவியின் செல்லப்பிள்ளை தான் சிவகார்த்திகேயன் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி தொடங்கி அது இது எது என விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்போது தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயரும் இருக்கிறது.

கவின் : விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த கவினுக்கு இதே சேனலில் அடுத்ததாக சரவணன் மீனாட்சி என்ற தொடர் கிடைத்தது. இதன் மூலம் தனது முத்திரையை பதித்த கவின் வெள்ளித்திரைக்கு சென்றார். அதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். இப்போது லிப்ட், டாடா என சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து இருக்கிறார்.

Also Read : மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் கவின்.. வைரலாகும் திருமண புகைப்படம்

பிரியா பவானி சங்கர் : விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தவர் தான் பிரியா பவானி சங்கர். இப்போது வெள்ளித்திரையில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு எக்கச்சக்க படங்களை பிரியா பவானி சங்கர் கைவசம் வைத்திருக்கிறாராம்.

நெல்சன் திலிப்குமார் : நெல்சனின் ஆரம்ப புள்ளி விஜய் டிவி தான். ஜோடி நம்பர் 1 போன்ற பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகு வெள்ளித்திரையில் இயக்குனராக வாய்ப்பு கிடைத்த நிலையில் தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தால் நெல்சனின் மவுசு உச்சத்தை பெற்றுள்ளது.

Also Read : ஜெயிலர் வெற்றியால் அடுத்தடுத்து நெல்சன் கூட்டணியில் உருவாகும் 5 படங்கள்.. தலைசுற்ற வைக்கும் சன் பிக்சர்ஸ் பட்ஜெட்

Trending News