வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2023-ல் பிரச்சனையில் மாட்டிய 5 பிரபலங்கள்.. மேடையில் அடித்துக் கொண்ட காக்கா, கழுகு பஞ்சாயத்து

5 Celebrities Got Trouble: சினிமாவிற்குள் நுழைந்து விட்டாலே சர்ச்சைகள் பிரச்சனைகள் ஒவ்வொருவருக்கும் பின் தொடர்ந்தே வருவது வழக்கமான விஷயம். அதிலும் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஏதாவது ஒரு விஷயத்தில் மாட்டிக் கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இப்பொழுது வரை பிரச்சனையில் மாட்டி தவித்துக் கொண்டிருக்கும் ஐந்து பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.

மன்சூர் அலிகான்: 80, 90களில் வில்லனாக வந்த மன்சூர் தற்போது லியோ படத்தின் மூலம் மறுபடியும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நேரத்தில் வாயை வச்சுட்டு சும்மா இல்லாமல் தேவை இல்லாமல் திரிஷாவை பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். இந்த விஷயம் மகளிர் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் கொடுக்கும் அளவிற்கு பெரிய சர்ச்சையாக வெடித்து விட்டது.

ரஜினி: இந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ரஜினி வழக்கம்போல் ஒரு குட்டி ஸ்டோரியை சொல்லியிருக்கிறார். அதில் காக்கா கழுகு என்று ஆரம்பித்த நிலையில் விஜய்யை தாக்கி தான் பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் ரஜினி மீது கோபத்தில் இருந்தார்கள். அந்த வகையில் இவருக்கு கூடிய விரைவில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கங்கணம் கட்டி அலைந்தார்கள்.

Also read: ரஜினியை பூஜை அறையில் வைத்து கும்பிட்ட விகே ராமசாமி.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

விஜய்: இந்த ஆண்டு பொங்கல் தினத்தை ஒட்டி வெளிவந்த வாரிசு படத்தின் சக்சஸ் மீட்டிங் போது சரத்குமார், சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொன்ன விஷயங்கள் பூகம்பமாக வெடித்தது. ஆனாலும் இதற்கு எதிராக எந்தவித கருத்தையும் சொல்லாமல் விஜய் மௌனம் காத்தது அனைத்து தரப்பான ரசிகர்களிடமிருந்து ட்ரோல் செய்யப்பட்டார். அதன் பின் கடைசியாக லியோ படத்தின் சக்சஸ் மீட்டிங் போது சூப்பர் ஸ்டார் பட்டம் தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது என சொல்லி பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

விஷால்: சமீபத்தில் வந்த மார்க்க ஆண்டனி படம் மூலம் விஷால் வெற்றி பெற்று விட்டார். இதனைத் தொடர்ந்து பிரமோஷன் டைம்ங்கில் விஷால் இயக்குனர்களுக்கு அறிவுரை கொடுக்கும்படி ஒரு விஷயத்தை பதிவு பண்ணி இருந்தார். அதாவது நாலு கோடி கையில வச்சுக்கிட்டு யாரும் சினிமா எடுக்கன்னு சொல்லிட்டு இந்த பக்கம் வந்துராதீங்க. அப்படியே உங்க கிட்ட அந்த காசு இருந்துச்சுன்னா உங்க பிள்ளை குட்டியை படிக்க வைத்து அவங்க பேர்ல டெபாசிட் பண்ணுங்க என்று சொன்ன விஷயங்கள் இவருக்கு பிரச்சினையாக திரும்பி விட்டது.

மாரி செல்வராஜ்: இந்த அண்டு உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் தேவர் மகன் குறித்து அவருடைய கருத்தை பதிவிட்டு இருந்தார். அதாவது சாதியை அடிப்படையாகக் காட்டி இசக்கி ஜாதியை தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கும் படம் தான் தேவர் மகன் என்று கூறி இருந்தார். ஆனால் படத்தில் அந்த மாதிரி எந்த ஒரு காட்சிகளும் இடம் பெறாமல் வன்முறை வேண்டாம், பிள்ளைகளை நல்லா படிக்க வையுங்கள் என்று கருத்தை தான் கமல் பேசி இருப்பார். அப்படி இருக்கும் போது மாரி செல்வராஜ் இந்த மாதிரி பேசியதால் சர்ச்சை வெடித்தது.

Also read: கடவுள் மாதிரி வந்து காப்பாற்றிய மாரி செல்வராஜ்.. மக்களை மீட்டெடுத்த மாமன்னன் வீடியோ

Trending News