வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஹீரோக்களின் வெற்றிக்கு சப்போர்ட்டாக இருக்கும் 5 பிரபலங்கள்.. தண்ணி வண்டியாக கம்பெனி கொடுத்த ஏஜென்ட் உப்பிலி

Actor Kamal: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வசூல் ரீதியாய் தெறிக்கவிட்ட படம் தான் விக்ரம். நீண்ட ஆண்டுக்குப் பிறகு கமல் மேற்கொண்ட இப்படம் இவரின் கம்பேக்காய் பார்க்கப்பட்டது. அவ்வாறு இருக்க படத்தில் இடம் பெறும் ஹீரோவிற்கு சப்போர்ட்டாய் நடித்த 6 பிரபலங்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

சந்தன பாரதி: பன்முக திறமை கொண்ட இவர் மேற்கொண்டு எண்ணற்ற படங்கள் வெற்றியைக் கண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கமல் நடிப்பில் இவர் இயக்கிய குணா, மகாநதி ஆகியவை பெயர் சொல்லும் படங்களாய் அமைந்தது. அதை தொடர்ந்து கமல் படங்களில் எப்படியாவது ஒரு சில கதாபாத்திரம் ஏற்று நடித்து விடுவார். அவ்வாறு விக்ரம் படத்தில் கமலுடன் ஏஜென்ட் உப்பிலியப்பனாய் தண்ணி வண்டி கதாபாத்திரத்தில் அசத்திருப்பார்.

Also Read: அங்கீகாரம் கிடைக்காத 5 பெண் இசையமைப்பாளர்கள்.. தனுஷ் கூட்டணியில் வெற்றி கண்ட கண்ணழகா பாடல்

ஜனகராஜ்: 80- 90 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக இடம்பெற்றவர் ஜனகராஜ். இந்நிலையில் ரஜினியுடன் இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் வெற்றியை பெற்று இருக்கிறது. ராஜாதி ராஜா, அண்ணாமலை, பணக்காரன், பாட்ஷா போன்ற படங்கள் இவர்கள் கூட்டணியில் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

மகாநதி சங்கர்: வில்லனாகவும், துணை கதாபாத்திரம் ஏற்றும் இவர் மேற்கொண்ட படங்களில் தன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். அமர்க்களம், தீனா போன்ற படங்களில் அஜித் உடன் இணைந்து நடித்திருப்பார். அவற்றில் ஏற்பட்ட நட்பை கொண்டே சமீபத்தில் துணிவு படத்திலும் ஆண்டனி கதாபாத்திரம் ஏற்க வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அஜித் இன்று வரை மறக்க முடியாத நடிகராய் மகாநதி சங்கர் இருந்து வருகிறார்.

Also Read: சென்சாருக்கு தயாரான ஜவான், கடுப்பில் நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரை நம்ப வச்சு கழுத்தறுத்த அட்லி

ஸ்ரீமன்: துணை கதாபாத்திரம் ஏற்று நகைச்சுவை உணர்வோடு இவர் நடித்த எண்ணற்ற படங்களில், விஜய்யுடன் இணைந்து வெற்றி கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்தே பிரண்ட்ஸ், போக்கிரி, வில்லு, பைரவா போன்ற படங்களில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாஸ்: நகைச்சுவை கதாபாத்திரத்திலும், துணை கதாபாத்திரத்திலும் இவர் மேற்கொண்ட நடிப்பு மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 2001ல் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்று லொடுக்கு பாண்டி என்னும் கதாபாத்திரத்தில் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் நடித்திருப்பார்.

Also Read: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல, நம்பர் நடிகையை வெறுப்பேற்றிய மாமி.. ஒரே நைட்டில் குட்டி போட்ட பூனையாக மாறிய மாஸ் ஹீரோ

பசுபதி: தான் ஏற்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கான நடிப்பினை வெளிக்காட்டும் திறமை கொண்டவர். அதிலும் குறிப்பாக 2003ல் தூள் படத்தில் விக்ரமுடன் இணைந்து ஆதி கதாபாத்திரத்தில் தெறிக்க விட்டிருப்பார். அதை தொடர்ந்து இவர்களை கூட்டணியில் அருள், மஜா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

Trending News