திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வில்லன்களை வெறுக்கும் அளவிற்கு மோசமாக நடித்த 5 கதாபாத்திரங்கள்.. ரஜினிக்கு டஃப் கொடுத்த வர்மன்

Five Villain Artist: பொதுவாக ஒரு படத்திற்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் எந்த அளவிற்கு ஹீரோக்கள் பெர்பார்மன்ஸ் பண்ணுகிறார்களோ, அதற்கு இணையாக வில்லன்களின் நடிப்பு இருந்தால் மட்டுமே அப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அப்படி சில வில்லன்கள் நடிப்பை தாறுமாறாக வெறித்தனமாக நடித்து வெறுக்கும் அளவிற்கு மிரட்டி இருப்பார்கள். அந்த வில்லன்களை பற்றி பார்க்கலாம்.

ஆர் கே சுரேஷ்: இவர் ஆரம்பத்தில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் சினிமாவில் பணியாற்றினார். அதன் பின் தாரை தப்பட்டை என்ற படத்தின் மூலம் கருப்பையா என்ற கேரக்டரில் வில்லனாக நடிப்பிற்கு நுழைந்தார். இவர் நடித்த முதல் படத்திலேயே நடிப்பை பாராட்டும் அளவிற்கு மிரள வைத்திருப்பார். ஆனால் இந்த மாதிரி ஒரு கொடூர வில்லனா என்று திட்டும்படியான வில்லத்தனத்தை கொடுத்திருப்பார். அதுவும் இப்படத்தில் வரலட்சுமியை சித்திரவதை செய்யும் கொடூர கேரக்டரில் நடித்திருப்பார்.

Also read: எஸ்ஜே சூர்யா மாதிரி இந்த 7 இயக்குனர்களிடம் வேலை பார்த்த மாரிமுத்து.. படம் எடுத்து வாழ்க்கை தொலைத்த கொடுமை

எஸ்ஜே சூர்யா: இயக்குனர், பாடல் ஆசிரியர், பின்னணி பாடகர் மற்றும் நடிகர் என்று பல அவதாரங்களை எடுத்து சினிமாவில் பயணித்து வந்த இவர் முதன் முதலில் வில்லனாக நடித்த படம் தான் ஸ்பைடர். இதில் இவருடைய சுடலை என்ற கேரக்டருக்கு ஏற்ற மாதிரி வில்லத்தனத்தை கொடுத்து அனைவரையும் மிரட்டி இருப்பார். இந்த வில்லனை பார்த்தால் ரொம்பவே பயமாக இருக்கிறது டேஞ்சர் என்று சொல்லும் அளவிற்கு கொடூரமாக நடித்திருப்பார். அதனால் தான் இப்படத்திற்கு சிறந்த வில்லன் என்று விருது வழங்கப்பட்டிருக்கிறது.

மொட்டை ராஜேந்திரன்: இவர் தமிழில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின் நான் கடவுள் படத்தில் தாண்டவன் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் அடித்து துன்புறுத்தும் கொடூர வில்லனாக நடித்திருப்பார். இவரைப் பார்ப்பதற்கு காமெடி பீஸ் ஆக இருந்தாலும் நடிப்பை பயப்பட அளவிற்கு மிரள வைத்திருப்பார். இப்படத்திற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறந்த வில்லனுக்காக கொடுக்கப்பட்டது.

Also read: இக்கட்டான சூழ்நிலையில் கை கொடுத்து தூக்கிவிட்ட ரஜினி.. நன்றி மறவாமல் உணர்ச்சிப்பூர்வமாக பேசிய ஜெயிலர் பட நரசிம்மா

பகவதி பெருமாள்: இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் பகவதியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்த இவர் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் பெர்லின் என்ற கேரக்டரில் ஊழல் நிறைந்த போலிஸ் அதிகாரியாகவும், பெண்களை வன்கொடுமை செய்யும் கேரக்டரில் மோசமான கொடூர வில்லனாக நடித்திருப்பார். இந்த மாதிரி ஒரு வில்லன் வேண்டவே வேண்டாம் என்று வெறுக்கும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கும்.

விநாயகம்: மலையாள நடிகராக பல படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு படத்தில் லொடுக்கு கேரக்டரில் நடித்தார். இதனைத் தொடர்ந்து காளை, மரியன் போன்ற படங்களில் நடித்து வந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால் பல வருடங்களாக தமிழ் சினிமாவிற்கு வரவில்லை. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு இவருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதுவும் ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற கேரக்டரில் ரஜினிக்கு டஃப் கொடுத்து வெறித்தனமான வில்லத்தனத்தை காட்டியிருப்பார்.

Also read: 2வது முறையும் அவருடன் பாடும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்.. ஒத்திகை பார்க்கும் பொழுது ஏற்பட்ட சங்கடம்

Trending News