செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வில்லனுக்கே பிளாஸ்பேக் வைத்து ஹிட் கொடுத்த 5 கேரக்டர்கள்.. கேங்ஸ்டர் ஆக உலா வந்த விக்ரம் வேதா

பொதுவாகவே எந்த படங்கள் வெற்றி ஆனாலும் அதற்கு ஹீரோ எந்த அளவுக்கு முக்கியமோ அதுக்கு இணையாக அந்த படத்தில் இருக்கும் வில்லன் கேரக்டர்களும். எந்த படத்தில் வில்லன் கேரக்டர் கச்சிதமாக இருக்கிறதோ அந்த படங்கள் கண்டிப்பாக வெற்றியடையும். அதிலும் வில்லனுக்கு பிளாஷ்பேக் வைக்கப்பட்டு அந்தப் படங்கள் இன்னும் கூடுதலாக வெற்றியடைய வைத்திருப்பார்கள். அந்த படங்களும் அதில் நடித்த கேரக்டர்களையும் பார்க்கலாம்.

சோனு சூட்: கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு அருந்ததி திரைப்படம் வெளிவந்தது. இதில் அனுஷ்கா, சோனு சூட், மனோரமா, அர்ஜுன் பஜ்வா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சோனு சூட் வில்லன் கதாபாத்திரத்தில் பசுபதி என்ற கேரக்டரில் நடித்தார். இதில் இவர் ஏன் ஆக்ரோஷமான வில்லனாக இருக்கிறார் என்று இவருக்கு ஒரு பிளாஷ் பேக் வைத்திருப்பார். இதில் இவர் அடியே அருந்ததி என்று சொல்லி அனைவரையும் மிரள வைத்திருப்பார். எத்தனை வில்லன் வந்திருந்தாலும் இந்த பசுபதியை பார்த்து மிரளதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவருடைய நடிப்பு இருக்கும்.

Also read: விஜய் சேதுபதி-மிஷ்கின் கூட்டணியில் ஏற்பட்ட பிளவு.. கடுப்பில் இயக்குனர் செய்த சம்பவம்

விஜய் சேதுபதி: புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு விக்ரம் வேதா திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி வேதவாக பயங்கரமான கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்திருப்பார். இதில் அவருடைய கடந்த கால வாழ்க்கையை சொல்லி எதனால் அவர் கடத்தல் காரராக மாறுவதை பற்றி சொல்லும் விதமாக பிளாஷ்பேக் வைக்கப்பட்டிருக்கும். இதில் வேதா உடைய கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி இருப்பார். இந்த கேரக்டர் வைத்தே அடுத்த சில படங்களில் இதே மாதிரியான கேங்ஸ்டர் வாய்ப்பை பெற்றுள்ளார் என்று சொல்லலாம்.

அக்ஷய் குமார்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு 2.0 திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் அக்ஷய் குமார் வில்லனாக சித்தரிக்கப்பட்டார். அதாவது இவருடைய பிளாஷ் பேக்கில் எமோஷனலான ஒரு கதையை வைத்து பின்பு அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்களால் பழி வாங்கும் கேரக்டரில் வில்லனாக நடித்திருப்பார். இதில் இவருடைய கேரக்டர் வேற லெவல்ல அமைந்திருக்கும்.

Also read: தனுஷை அசால்டாக கடத்தும் கும்பல், குட்டையைக் குழப்பும் அக்ஷய் குமார்.. வெளியான அத்ரங்கி ரே படத்தின் டிரைலர்

அரவிந்த்சாமி: மோகன் ராஜா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா ஆகியோர் நடித்தார்கள். இதில் அரவிந்த்சாமி, சித்தார்த் அபிமன்யு என்ற கேரக்டரில் வில்லன் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஒரு பிளாஷ்பேக் வைக்கப்பட்டு வேற லெவல்ல மாஸ் காட்டி இருப்பார். இப்படத்தில் ஹீரோவுக்கு டஃப் கொடுத்து தனி ஒருவன் என்றாலே அது சித்தார்த் அபிமன்யு தான் என்று சொல்லும் அளவிற்கு பெரிய வரவேற்பை பெற்றார்.

ராட்சசன் கிறிஸ்டோபர்: ராம் குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ராட்சசன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், அமலாபால், காலி வெங்கட் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டரில் பயங்கரமான வில்லன் ரோலில் நடித்து இருப்பார். இதில் இவர் எதற்காக தவறுகளை செய்கிறார் என்று இவருக்கு இளம் வயதில் ஏற்பட்ட அவமானங்களை பிளாஷ்பேக் மூலமாக எடுத்துக்காட்டப்படும். இவருடைய கேரக்டரை எல்லா வில்லனுக்கு எல்லாம் வில்லனாக இருக்கும்.

Also read: ரீ என்ட்ரியில் கெத்து காட்டிய அரவிந்த்சாமி.. சத்தம் இல்லாமல் கேரியர் குளோஸ் ஆன பரிதாபம்

Trending News